பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகிகள் 43 ஆகையால், அவர் 'வைடி என்று சொல்லிவிட்டதால், அவரை மட்டுமல்ல, அந்த ஆபீசில் அவளுக்குத் தெரிந்த மற்றவர்களையும் வைதாள், வைதாள் அப்படி வைதாள். ஆதிகேசவன், கூனிக்குறுகி டெலிபோனை வைத்தார். டில்லிக்குச் சுழற்றப் போனார். டயல் சத்தமே கேட்கவில்லை. இளங்கோ விளக்கமளித்தான். "எதிர்முனையில் பேசினவங்க, டெலிபோனை ஏறுக்கு மாறா வைத்தால், வேற நம்பருக்கு பேச முடியாது சார். மேடம் ஆதிகேசவன் போனை சரியா பொருத்தாமல் ஓரங்கட்டி வைத்திருப்பாங்க.” ஆதிகேசவன், குரங்கு ஓணானைப்பிடித்துப்பார்ப்பதுபோல, டெலிபோனை எடுத்து டயலிங் சத்தம் வருகிறதா என்று கேட்டார். வரவேயில்லை. அய்யோ. பிளேனா. ரயிலா. தெரிஞ்சாகனுமே என்று ஒரு எழுத்துக்கு ஒரு தடவை புலம்பியபடி, டெலிபோன் குமிழை எடுத்தார். ஆனாலும் மறுமுனையில் தர்மபத்தினி டெலி போனை சரியாக வைத்ததுபோல் தெரியவில்லை. எப்படியோ கால் மணிநேரத்திற்கு பிறகு டயல் சத்தம் கேட்டது. பி.ஏ., ராமதுரைக்கு போன் போட்டார். மணி அடித்தது. ஆனால் மகராஜன் இல்லை. "டைரெக்டருடைய வீட்டுக்கு போன் போடுங்க சார்” போட்டார். உடனே மணி அடித்தது. ஏஸ். என்ற குரலைக் கேட்டதும், ஆதிகேசவன் எழுந்தார். குழைந்து குழைந்து பேசினார். "ஹலோ சார். எஸ் சார். குட் ஈவினிங் சார். நமஸ்தே சார். ஐ யாம் சாயின்ட் டைரெக்டர் ஆதிகேசவன் சார். குச்சிருையி சார். அப்புறம் சார். சாரி சார். ஐ தாட் யு தமிழ் நோ சார். ஐ யாம் நாட் தமிழ் வெறியன் சார். பை தி பை சார். ஆப்கா கமிங் ட்ரெயின் ஆர் பிளேன்.கம்மிங் பை.ட்ரெயின். தாங்க்யூ சார்.வெளிவெளிதாங்க்யூ சார். என்ன யூ ர் நாட் டைரைக்டர் ஹிஸ் சன்.”