பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1 . தலைவன்


வானமே! நல்ல வனப்பான வையகமே !
ஈனமே இல்லா இளஞ்சுடரே - நானம்
கமழ்தென்றல் காற்றே ! கனைைகடலே ! கன்னித்
தமிழ்மன்றில் சாற்றத் தகும் !

கொல்லைப் புறத்தில் குழந்தைகூர்ம் பல்லன்ன
முல்லை யரும்பி முகையாகிப் - புல்லவரும்
மாலை 'நுகர்க மணமெ' னுமா றாய்மலரும்
நூ லை நுகர்க ,நுனித்து !

ஈவதனை யன்றி யிரப்பதறி யாஇனிய
மாவும், கதலி, பலா, மாதுளையும்-காவின்கண்
குந்தி யருந்தக் கொடுப்பதென வேகொடுக்கும் '
சிந்தை யருந்தச் சிறந்து !

காவில் பயிலும் களிவண்டே ! காமுறுசீர்ப்
பாவில் பயிலும் பரிபாலன் - நாவில்பே
ரன்பு பயிலும் ; அறம்பயிலும்; ஆரமிழ்தா
யின்பம் பயிலும், இணைந்து !

பங்குனியில் தங்கும் பசும்பொழிலாய்ப் பாங்குபடாக்
கங்குலிலே மன்காக் கவின்விளக்காய் - எங்கும்
கவிந்த பனிநாள் கனலாய்க்கார் நாளில்
நிவந்தகுடை யாவான் , நிலைத்து.

நீாிருந்தா லன்றி-நிலமிருந்தும் நேர்ந்துழநல்
லேரிருந்தும் எய்த்தொன் றியற்றாராய் - ஊரிருந்தோர்
காய்தலைக் காணின், கருணைகூர்க் கார்முகிலாய்த்
தேய்தலைத் தீர்ப்பர்ன், தெளிந்து .

எச்சிலுக் கேங்கி யெதிர்பார்த்தாங் கீனனது
குச்சிலில் தூ ங்கும்நாய்க் கோலத்தோ - டச்சோ !
வறுமைநோ -யெய்தி வருவோர்தம் வாழ்வுச் -
சிறுமையறச் செய்வதன் சீர்

காதில் விழுந்தசொல் காத்துக் கருத்தாய்ந்து
தீதுநன் றோர்ந்து திருத்தமுறப் -போதில்
நறும்தண்தே வென்ன நவில்வான்காண் , பொய்ம்மை
யறிந்துண்மை யாவ தறிந்து !

உண்மை யுளதாயி னுள்ளத்தில் ஒப்பற்ற
திண்மை யுளதாகும் தேகத்தில் , ஒண்மை
உளதாகும் வாக்கில் : ஒழுக லுளதாயின்
உலதாகும், நோக்கி லுயர்வு !

பருதி குடிகொண்ட பார்வை ;பண் பட்ட
சுருதி குடிகொண்ட சொற்கள ; -கருதின்
புவியாள்வோர் பூனாப் புகழ்பூண்டான் ; பூண்டான்,
கவியாள்வோர் கானாக் கவின் !

ஊருயர , உற்றா ருறவுயர , உற்றவொரு
பேருயரப் பெற்றோர்தம் பெட்புயரச் - சீருயர்க்கும்
நாவல்லோன் ; ஞானி, நகைமுகத்த னானஅவன்
சாவில்லோ னானான், சகத்து !

சிந்தை தமிழால் தெளிந்து செயலாக்கக்
கந்தம் கமழும் கவியமிழ்தை - வந்தவர்கள்
குந்தி யிருக்கக் குணமுறவெண் பாக்கலத்தில்
தந்தருந்த வைக்கும் தகை !