பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii i : به انگ: سس، ته ستیغ ، نسا نمایت

வளர்ச்சியன்று லாபம். அவர்கள் ஜப்பான நாங்களே நவீனமாக்கிளுேமென்று தற் புகழ்ச்சி செய்து கூவுகிறர்கள். ஒரு ஜாதியின் ஆவிக்கும் காலத்தின் சக்திக்கும் இசை தவறக் கூடாதென்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனல் நவீனத் தனத்துக்கும் நவீனத்துக்கும் பேதமுண்டு: கவிராயத் தனத்துக்கும் கவித்வத்துக்கும் பேதமிருப்பது போலே. இதை மறக்கக் கூடாது. இந்த நடிப்பு வெறும் கேலி தவிர வேருென்றுமில்லை. இது மூல்த்தை விட அதிக இரைச்சல், மூலத்தின் பொருளைக் கருதா மல் எழுத்தைக் கருதுவது. உண்மையான நவீன போதமுடையோர் நவீனத்தனம் பண்ணுதல் அவ சியமில்லை யென்பது ஞாபகமிருக்க வேண்டும். தீரர் தைரியம் பேசமாட்டார். நவீனத்வம் ஐரோப்பிய ரின் உடையிலே இல்லை. அவர்களுடைய குழந்தைகள் பாடம் படிக்கும்போது, அடைத்து வைக்கும் குரூப மான கட்டிடங்களில் இல்லை. தட்டையான நேர்வரிச் சுவர்களுடையனவும், ஸ்மதுார வரிகளில் உள்ள ஜன்னல் வரிசைகளை உடையனவுமான அந்த மனிதர் அடைபட்டுக் கிடக்கும் சதுர வீடுகளில் இல்லை. மேலும், அவர்களுடைய பெண் மக்கள் தலையிலே நானவிதமான கூளங்களைச் சுமத்திய தொப்பிகளி லும் நவீனத்வம் இல்லையென்று நிச்சயமாகக் கூறலாம். இவை நவீனமல்ல; கேவலம் ஐரோப்பியம். உண்மையான நவீனமாவது சிறந்த விடுதலை; ருசி பேதங்களுக்கடிமைபடுவதன்று அறிவிலும், தொழி விலும் விடுதலை; ஐரோப்பியவாத்திகளின் கீழே பள்ளிப் பிள்ளைத்தனமன்று. நவீனமாவ்து ஸயன்ஸ் (சாஸ்த்ரம்); அதை வாழ்க்கையிலே தவருக ப்ரயோகித்தலன்று. சாஸ்த்ரத்தை ஒரு மூட பக்தி யாக்கி, அளtங்கதமாக அதன் உதவியை எல்லா அஸாத்யங்களுக்கும் நாடுகிற நமது ஸயன்ஸ் வாத்தி யார்களைப் பின்பற்றுதல் நவீனமன்று.