பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- S SAAAS AAASASAAAAAS AAASASASS

செலவு, ஜனன மரணத் தொகை, மாதானத்தைப் பாதுகாக்கும் போலீஸ்காரரின் தொகை, கலக குணமுடையவர்களைத் தண்டிக்கச் கிறைச்சாலைகளின் தொகை, ரயில் பாதை நீளம், பள்ளிக்கூடங்களின் உயரம்-இவற்றின் கணக்குக் காணப்படும்.

நம்மவருக்கு நம்புதல் கஷ்டமாகத் தோன்றி லுைம், யதார்த்தமாகவே பூமியில் ஒரு ப்ரதேசத்தில் மஹத்தான ப்ரிடிஷ் ஜாதி என்று நியாயப் பெயர் பூண்ட ஜாதியொன்று வாளம் செய்கிறதென்பதை அறியும்படி எனது தேசத்தாரை வேண்டுகிறேன். பலஹீனர் பலவான்களைப் பற்றி அநியாயம் பேசுதல் அதிக பல ஹீனத்துக்கடையாளம். நாம் அவ்வித பலஹீனத்தை விலக்குதல் நமக்கொரு கீர்த்தியாம். இந்தப் பெரிய ஆங்கிலேயர் எல்லாவிதங்களிலும் உண்மையான மனிதர் என்று நான் ஸத்யமாகச் சொல்லுகிறேன். மற்றப் பெரிய ஜாதியாருக்கு மஹிமை தந்த குணப் பெருமையே இந்தப் பெரிய ஆங்கிலேயருக்கும் மஹிமை தருவது. கேவலம் வாள் வலியாலும், அல்லது பணப் பைகளைக் குவித்தத ஞலும் இந்த நிலைமைக்கு வந்துவிட்டார்களென்று நாம் கோபத்திலே சொல்லுதல் சரியில்லை. சண்டை அல்லது பணம் சேர்க்கும் தொழிலில் மாத்திரமே வலிமை யிருந்தது கொண்டு மஹிமை பெற்ற ஜாதியார் உலகில் இல்லை. தர்ம மஹிமையாலேதான் ஜாதி மஹிமை உண்டாகிறது. வேறு விதத்தில் உண்டாகுமென்ற வார்த்தையை-மேலே ருஜுக் கேட்காமல் திரஸ்காரம் புரிந்துவிடலாம். இந்தப் பெரிய ஆங்கிலேயர் நியாயம், உண்மை, விடுதலை என்ற ஆதர்சங்களை யதார்த்தமாக-நம்புகிரு.ர்கள். அவர்களுடைய இலக்கியத்திலும் இதிஹாஸ்த்திலும் அவை பல வகைகளில் காட்டப்படுகின்றன. இப் போது நடக்கும் போரில் இந்த ஆதர்சங்களே அவர் களுக்குப் பலம் தருகின்றன.