பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவானைக் கணவர்னே கர்ண்பார் “

குவியல்களின் அருகே உறைந்தது போல் காட்சி தந்தது. பிராங்க் கொஞ்சம் வேகம் பெற்று அதே தடத்தில் லேன்டியை நோக்கிச் சென்றது. அது தன் தலையை ஒருமுறை உயர்த்திப் பார்த்தது. லேன்டி சுட்டியபடி நிற்பதைக் கண்டதும் அது ஒதுங்கி விறைப்பாகவும் நேர்த்தியாகவும் காத்து நின்றது. அதை விட அழகு மிகுந்த படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். நான் கண்டதில்லை.

நிஜமாகவே நான் இப்போது சுடலாமா? ‘ என்று கேட்டேன். . .

  • துப்பாக்கியைக் கெட்டி பண்ணு, பிறகு அங்கே போ. பறவைகள் வெளியே வரும்போது ஒன்றைக் குறி வை. அதையே சுடு என்றார் தாத்தா.

நான் துப்பாக்கியைக் கெட்டித்து, நாய்களின் அருகே போனேன். மூடியின் கொக்கியை நீக்கினேன். அது க்ளிக் என எழுப்பிய ஓசை காதுகளில் நன்கு விழவில்லை. ஆளுல் தாத்தா அதைக் கேட்டுவிட்டார். -

நில். துப்பாக்கியை என்னிடம் தா’ என்றார் அவர். நான் குழப்பமடைந்தேன். என் உள்ளம் வேதனையுற்றது. அது என் துப்பாக்கி. தாத்தா அதை எனக்குத் தந்துவிட்டார். ஆனல் இப்பொழுது அவரே அதைத் திரும்ப எடுத்துக் கொண்டார். அவர் புகைக் குழாயை வாயின் ஒரு ஒரத்துக்கு ஒதுக்கியபடி, நாய்களின் பின் சென்றார். பறவைகள் இருந்த இடத்தை அவர் பார்க்கவேயில்லை. தனக்கு நேரே பார்வை யைச் செலுத்தினர். துப்பாக்கி அவர் உடலோடு 45 டிகிரி கோணத்தில் ஒண்டியிருந்தது. பறவைகள் மேலெழவும், தாத்தா துப்பாக்கியை உயர்த்தினர். அது உயரும்போதே அவர் கட்டை விரல் லேப்டி யை நீக்கியது. துப்பாக்கி மெதுவாக அவர் மோவாயண்டை வந்தது. அப்படி வந்த உடனேயே அவர் சுட்ட தாகத் தோன்றியது. இருபத்தைந்து கஜங்களுக்கு அப்பால் இறகுச் சிதறல்களோடு கீழே விழுந்தது ஒரு பறவை.

தாத்தா, மற்றாெரு குண்ட்ை வெளிப்படுத்தியவாறே சொன் ஞர் அதை எடுத்து வா’ என்று. - -

‘ என்னிடமிருந்து துப்பாக்கியை ஏன் பிடுங்கிய்ை ? என்று தான் கத்தினேன். நனைந்து விட்ட கோழி மாதிரி வெறிபிடித்

தவனுனேன் நான். நாசமாய்ப் போக. அது என் துப்பாக்கி தானே. உன்னுடையது இல்லையே என்றேன்.

தாத்தா சொன்னர் : 1. திட்டுவதற்கு நீ இன்னும் பெரியவ

ஞகவில்லை. வயது வந்தவர்களின் விசேஷ உரிமை அது. பல விஷயங்களைச் செய்ய நீ உரிமை பெறவேண்டியிருப்பது போலவே திட்டும் உரிமையும் பெற்றாகவேணும். அழுத்தமாகக் கூறுவதற் காகவே திட்டுதல் ஏற்பட்டது. சொல்லுக்குச் சொல் வசவும் இடம் பெறுமானல் அது சப்பென்றாகிவிடும். அப்புறம் அதற்கு