பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்டம்பர் கீதம்-2

பக்கத்தை கவனிப்பார். எல்லாப் பறவைகளும் என் பக்கமாக வந்தால், அவர் சுடவேமாட்டார். அவை அவர் பக்கம் சென்றால், நான் அவற்றைப் போகவிட்டு, விடுபட்ட பறவை ஒன்று என் முன்னல் வந்து குதிக்கும் என நம்பி நிற்பேன். அநேகம் தடவைகள் அப்படி வந்ததும் உண்டு.

தனிப் பறவைகளை நாங்கள் முறை வைத்துச் சுட்டோம். என் முறையின் போது இரண்டு பறவைகள் கிளம்பினுல்கூட, தாத்தா சுடமாட்டார். அரை டஜன் பறவைகள் மேலெழுந்து, ஒன்றிரண்டு வலது பக்கம், நான் குறிவைக்கும் இடத்துக்கு 180 டிகிரி எதிராகச் சென்றால் தான் அவர் சுடுவார்.

ஒரு விதத்தில், ஏகப்பட்ட பறவைகள் எங்களிடமிருந்து லகி ஓடின. ஆனல் ஏகப்பட்ட பறவைகள் தப்பியதுமில்லை. நமக்குப் பின்னலோ அல்லது அருகிலோ உள்ள அரிப்பெடுத்த துப்பாக்கிக்காரன் ஒருவனுடன் நாம் போட்டியிட வேண்டிய தில்லை என்ற உணர்வு நமக்கு அமைதி ஏற்படுத்தும். நாம் முதலில் பறவையைப் பறக்கவிட்டு, நேர்பட்டதும், சுட்டு வீழ்த்துகிருேம். அவசரமாகச் சுட்டு அதைத் தப்பவிடுவதில்லை, முழுசாகக் குண்டாலடித்து அதைத் துாள் தூளாக்குவது மில்லை.

இம்முறை நாய்களிடம் ஏற்படுத்திய வித்தியாசம் நம்ப முடியாததாகும். உணர்வுக் குழப்பம் பெற்ற வேட்டைக்காரன் நல்ல நாயைக்கூடக் குழப்பம் பெறச் செய்வான் ; அது பறவைகளைக் கூட்டும்போதும், கலைக்கும்போதும் தவறு செய்யும் ; தன் இஷ்டம்போல் வேலை செய்தால் அவசியம் மோப்பம் பிடித்திருக்கக்கூடிய தனிப் பறவையை அது விட்டுவிடும் என்று தாத்தா கூறியது சரிதான். எங்களிடமிருந்து தப்பிச் சென்ற பறவைகளுக்கு ஈடாக, நா ப் க ள் அவசரப்பட்டிருந்தால் அங்கிருக்கலாம் என்று யூகிக்கக்கூட முடியாத பறவைகளைக் கண்டு சுட்டு மகிழ்ந்தோம். - நாங்கள் ஒரு பறவைக் கூட்டத்தை வளைத்துச் சுட்டு, அடிபட்டவற்றை நாய்கள் எடுத்து வந்த பிறகு, தாத்தா ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, நாய்களைக் கூப்பிடுவார் : தன்து புகைக்குழாயைப் பற்றவைப்பார். நாம் அவற்றுக்குச் சிறிது அவகாசம் கொடுப்போம். அங்குள்ள ஒற்றைப் பறவைகள் நகர ஆரம்பித்து, சிறிது வாடை பரப்புவதற்குப் பத்து நிமிஷங்கள் பிடிக்கும். அப்போதுதான் நாய்கள் மோப்பம் பிடிக்க வசதிப்படும். இப்போது தான் தரையில் வந்திறங்கிய பறவைக்கு வாடை இருப்பதில்லை. முதலில் அது கொஞ்சம் நகர வேண்டும் ‘ என்று அவர் சொல்வார். - அங்குகூட ‘நான் புதிதாகச் சில கற்றேன். தனிப்பறவை ஒன்று தென்பட்ட இடத்தில் நாம் நெருக்கி அடித்து, நேரே நடந்து போளுல், பறவை பின் பறவையாக அநேகம் கலந்து