பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 தாத்தாவும் பேரனும்

“ உன்னைச் சிறு பொய்யன் என்று அழைக்கும்போது நான் முரட்டுத்தனமாக நடப்பதாகாது. அது அன்பின் அறிகுறி ஆகாவிடினும், மரியாதையைக் காட்டும் பதம் ஆகும். இன்று. காலை நிகழ்ச்சிக்காக நான் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன். நான் ஒரு சிறுவனக இல்லையே என்பதற்காக, இப்போது உன் மீது, பொருமை கொள்ளவில்லை. போய் உன் உடம்பிலுள்ள சகதி யைக் கழுவிவிட்டு, சாப்பிட வா. நாம் இறைச்சிக் கண்டம் தின் போம். ஏனெனில் ஒரு நாளைக்குப் போதுமான மீன்களை தி பிடித்து வந்திருப்பதாக நான் கருதுகிறேன் ‘ என்றார் அவர்.

தாத்தா புன்னகை புரிந்தார். ‘ நான் உண்மையில் மறுபடி யும் ஒரு பையணுக வேண்டும் என்று விரும்ப மாட்டேன். அது மிக அதிகமான வேலைதான்’ என்றார்.

2? ஆமை மசியல்

விஷயங்கள் நிச்சயமாக முன்பு இருந்தது போல் இப்பொழுது இல்லை. அறிவு பெறுவதற்காக நாம் செலுத்தும் அபராதம் அது. தனக்கு எது பிடிக்கும் அல்லது பிடிக்காது என்று ஒருவன் முடிவு பண்ணுவதற்குள், அது அவனுக்கு அகப்படாமல் போகிறது ; அதைப் பெறும் சக்தி அவனிடம் இல்லாது போகிறது ; அல்லது அதைக் கையாள முடியாமல் போகிறது. வைர முதுகு ஆமையைக் கொண்டு நான் இதை விளக்க முடியும் ‘ என்று தாத்தா சொன்ஞர்.

“ சரி ஐயா” என நான் விநயத்தோடு சொன்னேன். அப். பொழுது செப்டம்பர் மாதம். நாங்கள் பெளர்ணமி வரட்டும் என்று காத்திருந்தோம். அப்பதான் அலைகள் பொங்கி எழும் ; சதுப்பு நிலப் பறவைகளைச் சுடும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டும். டிருக்கள், சதுப்புக்கோழிகள், ஒற்றை அணில்கள் தவிர, வேட்டை யாடுவதற்கு அதிகமாக ஒன்றுமில்லை. ஆனல், அணில் வசிக்கும் மரங்களில் இலைகள் மிகுதியாக அடர்ந்திருந்தன. புருக்களைச் சுட முடியாதபடி உஷ்ணம் அதிகமாக இருந்தது.

உலகத்தில் உள்ள ஞானம் முழுவதும் வைர முதுகில் அடங் கிக் கிடக்கிறது. உனக்கு வேலை மிகுதியாக இல்லையெனில், நான் இதைத் தொடர்ந்து விளக்குவேன்’ என்றார் அவர்.

“ எனக்கு அதிக வேலை இல்லை. இன்னும் பள்ளிக்கூடம் துவங்க வில்லை. நாய்க்குட்டிகளைப் பழக்க முடியாதபடி காட்டில் மித. அதிகமான பாம்புகள் உள்ளன. தயவு செய்து தொடர்ந்து