உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


ரத்துடன் கொலுவீற்றிருந்த வணங்காமுடி மன்னர்கள்களைப் பற்றியும், அயர்லாந்தில் தேசியக்கொடி பகைவர்களை வெற்றி கொண்டு ஆகாயத்தில் துலங்கிக் கொண்டிருந்ததைப் பற்றியும், பின்னால் அயர்லாந்தின் மக்கள் அடிமை விலங்குகளால் பிணைப்புண்டு கிடந்ததைப் பற்றியும் ஆகாயத்தில் வீசிய காற்றிலும் அடிமைத்தனத்தின் துர்நாற்றம் நாறியதைப் பற்றியும் அவன் உள்ளத்தில் அலை அலையாகப் பல எண்ணங்கள் எழுந்தன, அக்குன்றின் மேல் பழம் பெருமையைக் காட்டக்கூடிய ஒரு பொருளும் காணப்படவில்லை. மன்னர்கள் வசித்த அரண்மனைகள் மணல் மேடுகளாகிவிட்டன. எல்லாம் மறைந்தொழிந்து விட்டன. ஆனால், அயர்லாந்தை எதிர்த்து வெற்றி கொண்ட ஆங்கிலப் பகைவர்களின் சிப்பாய்கள் அவ்விடத்தி, போராடி இறந்ததற்கு அறிகுறியாக ஒரு சிலுவை மட்டும் நடப்பட்டிருந்தது. அவ்விடத்தில் 1898-ஆம் ஆண்டு அயர்லாந்தின் சுதந்திரத்தைக் காப்பதற்காக எத்தனையோ ஐரிஷ் வீரர்கள் பகைவர்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்தனர். அவர்களுக்கும் அச்சிலுவையே ஞாபகக் குறியாக விளங்கியது. தான்பிரீன் அவ்விடத்தில் முழங்காற் பணியிட்டுக் கொண்டு பழைய ஐரிஷ் வீரர்களுடைய கனவு நிறைவேற வேண்டும் என்றும், அதை விரைவில் நிறைவேற்றுவதற்குத் தனக்கு வலிமையும் வீரமும் பெருகவேண்டும் என்றும் இறைவனைத் துதித்தான்

மலையடிவாரத்தில் பழைய சிங்காரமான மாளிகைக்குப் பதிலாக நாட்டைப்பிடித்துக் கொண்ட அந்நியருடைய கோட்டைகளே காணப்பட்டன. அங்கு குடியானவர்களேயில்லை. இடையிடையே தொழிலாளர்களுடைய குடிசைகள் சில மைதானங்களின் மத்தியில் இருந்தன வீதிகளில் மக்களுடைய நடமாட்டமேயில்லை. அரசர்களுக்கும் குடியானவர்களுக்கும் பதிலாகக் கொழுத்த மாடுகளே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. அந்த மாடுகளும் ஆங்கிலேயரின் உணவுக்காக வளர்க்கப்பட்டவை!

கோடைகாலம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. தான்பிரீன் உடம்பு முற்றிலும் குணமாகி மீண்டும் வேலைக்குத் தயாவிட்டான். தேசத்தில் நெருக்கடி அதிகமாகிவிட்டது. பத்திரிகைகளில் மனம் பதறக்கூடிய பல செய்திகள் வெளிவந்தன. அச்சமயத்தில் அவன் போராட்டத்தின் மத்தியில் நில்லாது மலையடிவாரத்தில் பொழுது போக்கவிரும்பவில்லை. ஐந்தாறு மாதங்களுக்கு முன்னால் டப்ளினில் லார்ட் பிரெஞ்சைச் சுடுவதற்காகப் பலசமயம் தான்பிரீனுடன் காத்துக் கொண்டிருந்த கார்க் நகர மேயரான, டாம் மக்கர் டெயின் என்பவர் அவருடைய வீட்டிலேயே அவரது மனைவி, முன்னால் பிரிட்டிஷாரால் கொலைசெய்யப்பட்டார். தர்லஸ் நகரிலும் இதுபோல் இரண்டு மூன்று கொலைகள் செய்யப்பட்டன. இவற்றை கேட்ட பொழுது தான்பிரீனுடைய ரத்தம்

கொதித்தது. போர்! போர்! என்று அவனுடைய உள்ளம் துடித்தது. உடனே டப்ளினுக்குச் சென்று, பல நண்பர்களையும் கண்டு மீண்டும் கெரில்லாச் சண்டையை ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். டிக் மக்கீ, பீட்டர்

103