உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூன்றாம் பதிப்புக்கான
பதிப்புரை


சில ஆண்டுகளுக்கு முன் காலமான இந்திய விடுதலைப் போராட்ட இயக்க வீரர். ப. ராமஸ்வாமி அவர்கள் அயர்லாந்து விடுதலைப் போராட்டம் குறித்து மூன்று நூல்கள் எழுதியுள்ளார். அதிலொன்றுதான் அயர்லாந்து விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய கெரில்லாப் போர்வீரன் தான்பிரீன் (டேன் பிரையன்) வரலாறும் ஆகும். நூலாசிரியர் எழுதிய முன்னுரையிலிருந்து அந்த நூல் 1947ல் தான் முதன் முதலில் வெளியிடப்பட்டது என்று அனுமானிக்கலாம். அதனை முதன் முதலில் வெளியிட்ட பதிப்பகத்தாரின் விபரம் நமக்குக் கிடைக்கவில்லை.

இந்த நூலைக் கண்டறிந்தவர் அதனுடைய இரண்டாம் பதிப்பினை வெளியிட்ட மறுமலர்ச்சிக் கழகம், யாழ் பல்கலைக் கழகம் தனது பதிப்புரையில் கூறுவது போல ஓர் ஈழப் போராளியாவார். அதனைப் படி எடுத்தவரும் ஒரு ஈழப் போராளியே. தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத்தான் இந்த நூலின் அருமை தெரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

உலகிலுள்ள எல்லாத் தேசியப் போராட்டங்களுக்கும் ஆதர்சமாகத் திகழ்வது அயர்லாந்து விடுதலைப் போராட்டமாகும். ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களிற் பலருக்கு அயர்லாந்துப் போராட்டம் முன்னெடுத்துக்காட்டாக இருந்தது போலவே இன்று ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்

11