பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


டைய தோழருக்கு என்ன நேர்ந்ததோ என்று கவலையுற்றான். கையில் இருந்த வாளியைக் கீழே வைத்துவிட்டு குடிசைக்குள் விரைந்தோடினான். பரணியில் ஏறிப்பார்த்தான். அங்கே பாட்ரிக்கியோக் பேச்சற்றுக் கீழே கிடந்தான். தான்பிரீன் அவனைக் கைகளில் ஏந்திக்கொண்டு மேலிருந்து விழுந்துகொண்டிருந்த கொள்ளிக்கட்டைகளின் நடுவே எடுத்துச்சென்று அங்கேயிருந்த மல்டீன் ஓடைக்கரையில் கொண்டு வைத்தான். வாளியைக் கொண்டு வந்து அதில் இருந்த குளிர்ந்த நீரை அவனுடைய முகத்தில் இரண்டுமுறை தெளித்தான். உடனே கியோக் எழுந்து நின்று "ஏ மூட சிகாமணியே! என்னைத் தண்ணீரில் அமிழ்த்திவிடுவாய் போலிருக்கிறதே!“ என்று வேடிக்கயைாகக் கோபித்துக் கொண்டான். தான்பிரீன் எப்படியாவது நண்பன் பிழைத்துக் கொண்டானே என்று ஆனந்தங் கொண்டான். அவர்கள் இருவருக்கும் குடிசையும் வெடிமருந்துச் சாலையும் அழிந்துபோன கவலை மட்டும் தணியவில்லை.

தான்பிரீன் கையிலிருந்த காசையெல்லாம் வெடிமருந்துச் சாலைக்காகச் செலவழித்திருந்தான். இப்பொழுது ஒட்வியருடைய வீடு எரிந்து போனதிற்கு நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டியிருந்தது. தோழர்களின் உதவியால் வீடு முன்னைப் பார்க்கிலும் அழகாக அமைக்கப்பட்டுவிட்டது. எனினும் தான்பிரீனுடைய தொழிலுக்கு அவ்வீடு பின்னால் கிடைக்கவில்லை. அதனால் அவன் திப்பெரரிவாசியான ஓ கானல் என்பவருடைய வீட்டில் தனது தொழிற்சாலையை அமைத்துக்கொண்டான். அவ்விடத்தில் அவனுக்கு அதிக வெற்றியும் கிடைத்தது. ஏனென்றால் மீண்டும் வீடு வெடித்துவிடாமல் இருப்பதற்கு அவன் மிகுந்த முன்னெச்சரிக்கை எடுத்துக்கொண்ட்ான்.

அந்த வீட்டில் இருக்கும்பொழுது தொண்டர்களுக்குச் சந்தோஷம் ஏற்படவில்லை. ஏனென்றால் அங்கு ஒரு விதமான செளகரியமும் கிடையாது. படுக்கை, பாய், தலையணை எதுவும் கிடையாது. அவற்றை வாங்கப் பணமும் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இரண்டு கம்பளங்களை இரவல் வாங்கி வைத்துக்கொண்டு தலையிலே வைக்கோலை விரித்து அதன்மேல் ஒரு கம்பளத்தை விரித்துத் தொண்டர்கள் கிடப்பது வழக்கம். மேலேயிருந்துவரும் பனியைத் தொண்டர்கள் தாங்கமுடியாமல் அவர்கள் ஏராளமான பழைய பத்திரிகைகளை உடல்களின் மீது போர்த்துக்கொண்டு அவற்றிக்கு மெலாகக் கம்பளத்தை மூடிக்கொள்வார்கள். கொஞ்சம் உருண்டு புரண்டு படுத்தால் பத்திரிகைகள் கிழிந்துபோகும்; மீண்டும் குளிர் ஆரம்பித்துவிடும். ஆதலால், அவர்கள் அசையாமலே ஒரே நிலையில் படுத்திருந்து தினமும் மூன்று மணிநேரம் உறங்குவது வழக்கம். குளிரைத் தவிர வேறு சில தொந்தரவுகளும் இருந்தன. வீடு முழுவதும் சுண்டெலிகள் நிறைந்திருந்தன. இரவில் அவைகள் படுத்திருந்தவர்களின் தலைகளைக் கடித்துக் கடித்து எழுப்பிவிட்டுவிடும். சில சமயங்களில் தான்பரீன் கோபத்துடன் எழுந்து அவற்றை அடிப்பது வழக்கம். அப்பொழுது எலின்டிரிஸி, "அண்ணா அவைகளாவது சந்தோஷமாயிருக்கட்

49