பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii

எழுதியுள்ளவற்றை அங்கங்கே எடுத்துக் கொடுத்திருக் கிறேன்.

ஐங்குறுநூற்றையும் அதன் உரையையும் ஆராய்ந்து செப்பஞ் செய்து முதல் முதலில் 1903-ஆம் ஆண்டில் என் னுடைய ஆசிரியப் பிரானகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் வெளியிட்டார்கள். அவர்கள் எழுதிய முகவுரை யில் இந்நூலின்பெருமையை,'சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்தது. பொருள்களின் இயற்கை அழகையும் தமிழ்ப் பாஷையின் இனிமையையும் நன்கு தெரிவிப்பது. இத் தமிழ் நாட்டின் பழைய காலத்தின் நிலைமையையும் சில சரித்திரங்! களையும் புலப்படுத்துவது” என்று எழுதியிருக்கிருர்கள். சங்க நூல்களின் சுவையை நன்கு அறிந்து மகிழ்ந்து ஆராய்ச்சியும்: விளக்கமும் சரித்திரமும் கதையும் எழுதும் துறையில் பல அன்பர்கள் இக்காலத்தில் ஈடுபட்டிருக்கிருர்கள், அத்தனைக் கும் வித்திட்ட பெருந்தகை ரீமத் ஐயரவர்கள் என்பதை. நினைக்கும்போதும், அவர்கள் தாளிணேக்கீழ் இருந்து தமிழ் கற்கும் பேறு எளியேனுக்குக் கிடைத்தது என்பதை நினைக் கும்போதும் பெருமிதம் உண்டாகிறது. எல்லாம் முருகன் திருவருள். -

இதற்குமுன் வெளியான மனைவிளக்கைக் கண்டும் குறிஞ் சித்தேனைச் சுவைத்தும் இன் புற்றுப் பாராட்டிய அன்படகள் இந்தத் தாமரைப் பொய்கையிலும் மூழ்கி உளம் குளிர்வார்கள் என்று நம்புகிறேன். -

7–3–52 கி. வா. ஜகந்நாதன்

குறிப்பு இரண்டாம் பதிப்பில் புதியனவாக மூன்று பாடல்களின் விளக்கக் கட்டுரைகள் சேர்ந்திருக்கின் றன. கி. வா. ஜ.

7–8–58