பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தாமரைப் பொய்கை

பெண்ணைக் கொடுத்துவிட்டு, போன இடத்தில் வாழ்க்கை பொருத்தமாக இல்லாமல் அவள் கண்ணேக் கசக்கிக் கொண்டு நின்ருல் என்ன செய்வது? எந்தக் காரியத்தையும் ஆய்ந்து ஓய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும். பெண்களின் கல்யாணத்தையோ பல தடவை யோசித்துத் தெரிந்து, பெண்ணுக்கு எவ் வகையிலும் ஏற்ற இடம் என்று உறுதியாகச் தெளிந்து கொண்ட பிறகே செய்ய வேண்டும்.

கண்மணியைப் போலப் பாதுகாத்து வரும் பெண்ணே நல்ல இடத்தில் கொடுத்தோம் என்ற நம் பிக்கை இருந்தால்தான் பெற்ருேர்களுக்கும் மனஅமைதி கிடைக்கும்; பெண்ணுக்கும் இன்பம் உண்டாகும். அப் படியின்றிப் பெண் பேச வருபவர்களுடைய பேச்சிலே மயங்கியோ வேறு காரணங்களாலோ தகாத இடத்தில் பெண்ணேக் கொடுத்துவிட்டு, அவள் துன்புறும்போது மாற்ற முடியாமல் விழிப்பதைவிடப் பேதைமைச் செயல் யாதும் இல்லை.

வந்தவர்கள் தலைவனப் பற்றி உயர்வாகத்தான் சொன்னர்கள். அவர்கள் தம்மைச் சார்ந்தவரைப்பற் றிச் சிறப்பாகச் சொல்வதுதானே இயல்பு அவர்கள் செர்ல்வதில் எவ்வளவு பகுதி உண்மையென்று தெரிந்து கொள்ள வழி இல்லை. பெருமுயற்சியை மேற்கொண்டு அவனைப் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம். ஆனல் அவ்வாறு செய்வது அவசியமா? பெண்ணுக்கு மணுளன் கிடைக்காமல் அவர்கள் திண்டாடவில்லையே!

இத்தனே எண்ணங்கள் தலைவியின் தமர்களுக்குத் தோன்றின்."அவருக்கு நல்ல செல்வம் இருக்கிறதா? கில