பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழின் வலி r 25 வாறே திட சித்தத்தவகை, புரவியைத் தீவிரமாய்ச் செலுத்தினன். அதோ, எல்லைக் கோடு ! நிலவுத் தீவுப் படையினரின் வரிப்புலிக் கொடிகள் வெஞ்சினத்துடன் பறந்து வர, படைகளின் தலைமகனுக கஜேந்திரபாகு குதிரைமீதமர்ந்து வந்தான். எதிரும் புதிருமாக நின்றனர், கஜேந்திரபாகுவும் விஜயேந்திரனும், கஜேந்திரபாகு இளவரசன் விஜயேந்திரனைக் கண்டதும் ஏனே ஒரு கணம் செயலிழந்தான். விஜயேந்திரனே அந்தப் பயங்கர மனிதனின் கொடுவாள் மீசையை நினைத்து மனத்தில் எள்ளி நகையாடினன். இவ்வளவு பெரிய மீசை இருந்து பயன் என்ன? கடைசியில் இதோ நொடிப் பொழுதில் இவன் என்னிடம் மண்ணைக் கவ்வப் போகிருனே ?... என்று எண்ணிப் பெருமிதம் அடைந்தான் மங்களபுரி இளவரசன். மகாலயதீரத்தில் இருந்த ராஜகுருவின் குருகுலத்தில் வாசம் செய்து, அறுபத்து நான்கு தவம் இருந்து பாடம் பெற்றவனுயிற்றே அவன். மங்களபுரிப் படைகளும் நிலவுத் தீவுப் படை களும் பொருதின.