பக்கம்:தாயுமானவர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 118 榜 தாயுமானவர் மூன்றாவது பூதமாய் அமைந்திருப்பது தீ அல்லது நெருப்பு. காற்றைவிடத் துல நிலைக்கு வந்திருப்பதால் அஃது இன்னும் அதிகமான எல்லையில் அடங்குகின்றது. சூரியன் போன்ற கோள்களில் அது நிலை பெற்றுள்ளது. புவியின் உட்புறத்தில் அஃது அக்கினிக் குழம்பாக நிறைந் துள்ளது. இளநீரோடு ஒப்பிட்டு பூமியின் அமைப்பைத் தெளியலாம். இளநீரின் உட்பகுதியில் இனிய நீர் அமைந்தி ருப்பது போன்று பூமியில் ஐம்பது கல் தொலைவுக்கு அப் பால் ஆழமான உட்பகுதியில் அக்கினிக் குழம்பாக அமைந் துள்ளது. இந்தக் அக்கினியின் தந்மாத்திரை ஒளி அல்லது ரூபம். ஒளிவிடுதல் அக்கினியோடு கூடி இயல்பாய் அமைந் துள்ளது. அந்த ஒளியின் துணை கொண்டு வடிவத்தைக் கிரகிக்கும் ஆற்றல் நமக்கு வருகின்றது. இதற்குத் துணை புரிவது கண் என்னும் பொறி. நான்காவது பூதமாய் வருவது நீர். இது வண்ணத்தில் இன்னும் சிறிதாய் விடுகின்றது. சூரியனிடத்திலும் பூமியின் உட்புறத்திலும் அக்கினி இருப்பது போன்று நீர் அவ்வளவு வியாபகமாய் இல்லை. பூமியின் மேல் பரப்பில் முக்கால் பகுதியை அது மூடிக் கொண்டுள்ளது. சுவைத்துப் பார்ப்ப தற்குத் துணையாய் இருப்பது நீர். ஆகவே, புவியின் தந்மாத் திரை ரசம் என்னும் கோட்பாடாகின்றது. நாவில் ஊறும் உமிழ்நீருடன் கலக்கப் பொருளைச் சுவைத்துப் பார்க்கின் றோம். நீரினைவிட மேலும் ஒடுங்கிய நிலையில் இருப்பது நிலம். இப்பரந்த மண்ணுலகில் நாம் வாழ்வதற்கென்று அமைந்தது கால் பங்கு ஏனைய முக்கால் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. மணம் மண்ணின் தந்மாத்திரை. மூக்கின் துணை கொண்டு நாம் பிரிதிவி (பூமி)யின் மனத்தை முகர்கின் றோம். இந்த ஐம்பெரும் பூதங்களும் படைப்பிற்குப் பயன்ப் டுகின்றன. இப்படைப்பை உண்டு பண்ணிய இறைவனை ஐவகை என்னும் பூதமாதியை வகுத்தவர் எனத் தாயுமானவர் குறிப்பிடுகின்றார். "வகுத்தல்’ என்னும் சொல் படைத்தலைக் குறிப்பிடுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/138&oldid=892129" இலிருந்து மீள்விக்கப்பட்டது