பக்கம்:தாயுமானவர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 166 தாயுமானவர் ● 激 கொண்டே போகின்றது. இங்கனம் வளர்வதற்குக் காரணம் அவனிடமுள்ள அஞ்ஞானமேயாகும். கால்நடையில் செல் கின்றவன் தன் சுமையைக் கையிலோ அல்லது தலையிலோ சுமந்து கொண்டே போகவேண்டும். ஆனால், அவன் இருப் பூர்தியில் பயணம் செய்யும்போதும் தன் சுமையைத் தலை யிலே வைத்திருப்பானேயாகில் அது பரிதாபகரமான நிலை யாகின்றது. வண்டியில் ஒர் இடத்தில் சுமையை இறக்கி வைத்துவிட்டால் அது அவனோடு வந்து கொண்டே இருக் கும். அதைச் சுமக்க வேண்டிய சிரமம் அவனுக்கு இல்லாது போகும். இறைவனுடைய அருளை அறிந்து கொள்கின்ற வரையில் அவரவர் 'வினை என்னும் சுமையை அல்லும் பகலும் சுமந்து கொண்டே உள்ளனர். இறைவனுடைய அருளால் எல்லாம் நிகழ்கின்றன என்று அறிகின்றவர்கள் தங்கள் வினையை இறைவன் வினை என உணர்ந்து இறைவ னிடம் ஒப்படைத்து விடுகின்றனர். பிறகு வினை அவர்களி டம் வளர்வதில்லை. அதன் பயனும் அவர்களை அடைவ தில்லை. வினைக்கும் அவர்கள் கர்த்தாக்கள் ஆவதும் இல்லை. இக்கருத்தையே தேர்த் தட்டிலிருந்து கொண்டு பரந்தாமன் பார்த்தனுக்கு விளக்கினான். இக்கோட்பாட்டைத் தான் தாயுமானவர் 'வினை ஏது? என்று இயம்புகின்றார். 'காயம் என்பது உடல். காயத்தைப் பெற்றிருப்பது சீவனுடைய மற்றொரு கூறு. காயம் வெங்காயம்" போன்றது. வெங்காயத்தின் சருகை உரிக்க உரிக்க உள்ளிருக்கும் பகுதி சருகாக மாறி அமைகின்றது. சீவான்மாவுக்கு வினை இருக் கும் வரையில் அதன் புறத்தோற்றமாக உடல் வாழ்வு அவ னுக்கு வந்தமைகின்றது. விதவிதமான உடலங்களை எடுத்த வர்களாக எண்ணிறந்த சீவான் மாக்களைக் காண்கின்றோம். அவரவர் வினையை நிறைவேற்றிக் கொள்வதற்கான உடலங் களை அவர்கள் எடுத்து வருகின்றனர். "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 4. தந்தை பெரியார் தம் பேச்சில் அடிக்கடிக் கையாளும் சொல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/186&oldid=892182" இலிருந்து மீள்விக்கப்பட்டது