பக்கம்:தாயுமானவர்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& so - శ 268 தாயுமானவா என்ற கண்ணி பிறந்து விடுகின்றது. " இதற்கு விளைநிலம் மேலே குறிப்பிட்ட திருமந்திரப் பாடலே. இன்னும் அடிகளார் தம் ஆன்மநேய அநுபவச் சாரமாகத் திகழ்வன காடும் கரையும் என்ற தலைப்பிலுள்ள மூன்று திருவிருத்தங்கள். இவற்றுள்ள மூன்றாவது பாடல், 'காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ போகம் எனும்பேர் இன்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக வுருவாய்க் கடக்குதையோ? இன்புற் றிடநாம் இனிஎடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்திரேt(3) என்பது மிக உயர்ந்த பாடல், தாம் பெற்ற இன்பத்தைத் தரணி எல்லாம் பெற்று உய்ய அடிகளார் உலகரை நெஞ்சுரு கக் கூவியழைக்கின்றதை இங்குக் காண்கின்றோம். இறைவன் தந்தது உடல், அதனைப் போற்றிக் காத்து அவனது அருளைப் பெற அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் அருளிய இந்த அற்புதக் கருவியை அலட்சியப்படுத்தி அழித்துக் கொள்ளலாகாது. திருமூலர் கூறு ឍវះ 'உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபயாம் அறிந்தே' " 18. நான் திருச்சியில் கல்லூரியில் பயின்றபோது (1934-39) - வயது (18-23). தாயுமானவர் பாடலில் ஆழங்கால் பட்டேன். தங்கியிருந்த இடம் மலைவாசல் அருகே. வாரம் ஒருநாள் தாயுமானவர் சந்திதிக்கும் உச்சிப் பிள்ளையார் சந்நிதிக்கும் போய் வருவது உண்டு. அக்காலத்தில் இக்கண்ணியும் 'அன்பர் பணிசெய" (155), கொல்லா விரதம் ஒன்று (192), கொல்ல விரதம் குலவயம் எல்லாம் ஓங்க (54), எல்லோரும் இன்புற்று இருக்க (221) என்ற கண்ணிகளும் என் உள்ளம் கவர்ந்தவை. 19. திருமந்.மூன்.தந்.கா.:சித்தி உபாயம் - 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/288&oldid=892294" இலிருந்து மீள்விக்கப்பட்டது