பக்கம்:தாய்மை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 55

அம்பலவா’ என்று ஆர்வத்தால் அழைக்கும் குரல் நம் செவிகளில் கேட்கிறது. குனிப்புடையான்’ என்ற குறிப்பு உள்ளது. அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்’ “ஊனார்முடைத் தலையில் உண்பலிதேர் அம்பலவன்’ என்பன போன்ற தொடர்கள் உள்ளன. இவ்வாறு வேலு இடங்கள் குறிக்கப் பெறாமையாலும் மேலே கண்ட தொடர்களாலும் இது தில்லையில் பாடப்பெற்றது, என அறியலாம்.

அப்படியே திருவாசகத்தில் பலபகுதிகள் இறைவனோடு ஒன்றிக் கலந்த உயர்நிலையைக் குறிப்பனவாயினும், இதில் சற்றே விளக்கமாகவும் தெளிவாகவும் தான் அவனோடு கலந்த தன்மையினையும் அதற்கென ஆண்டவன் வழி காட்டி ஆட்கொண்ட நெறியினையும் விளக்குவதால் அத்தலைப்பு ஏற்புடைத்தாகும் என்பது'தெளிவு. இறைவன் தன்னை ஆட்கொண்ட தன்மையினைப் பலப்பல தொடர் க ளா ல் அடிகளார் விளக்குவது இ த ைன நன்கு வலியுறுத்தும். விளக்கத்தினை அங்கங்கே காணலாம்.

திருக்கோத்தும்பி திருவாசக வரிசையில் பத்தாவதாக அமைந்து இருபது பாடல்களைக் கொண்ட ஒன்றாகும். எட்டினோடிரண்டும் அறியேன்னயே என்று பாடிய அவர், எட்டும் இரண்டும் இணைந்த பத்தாவதாகிய இப்பகுதியில் அவற்றை அறிந்த நிலை பற்றியெல்லாம் கூறுகிறார். இப் பத்தும் பற்றும் தொடர்புடையன; இப்பத்தாம் பகுதி -யினை அறியப் பற்று அறல் வேண்டும், பற்றினையே பத்து’ எனவும் மணிவாசகரே கூறுவர் (5வது பாட்டு). இறைவன் தன்னை எவ்வெவ்வாறு ஆட்கொண்டான் என்பதையும்-தான் ஆட்கொள்ளப்பெறும் நிலைக்குமுன் இருந்த தன்மையினையும்-இறைவன் பண்பினையும் அவன் வழியே செயலாற்றும் தன் சித்தம் தெளிந்து தன்னை மறந்தின்பமுறும் நிலையினையும் எண்ணி எண்ணிப் பாடுகின்றார் மாணிக்கவாசகர். இறைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/57&oldid=684840" இலிருந்து மீள்விக்கப்பட்டது