பக்கம்:தாய்மை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையான மெய்ச்சமயம் 75

காட்டும் சமயங்களையும்கூடத் தன்னுள் அடக்கும் வகையில் சி ற ந் துள்ள து வயது வந்த மூத்த அறிவுடையோர், எல்லா வேறுபாடுகளையும் மறந்து தம் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், கொள்ளுப் பேரர்கள் ஆகியோர் அவர்களுக்குள்ளே எத்தனை வேறுபாடு பெற்றவர்களாயினும், அனைவரையும் ஒன்றாகத் தழுவிச் செல்லுவது போன்று எல்லாச் சமயங்களையும் தழுவிச் செல்லும் தொன்மைச் சமயமாக இச்சமயம் திகழ்கின்றது என்பதை இ ச் ச ம ய உண்மை அறிந்த யார்ே மறுக்கவல்லார்?

விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே

எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்றதாகும் என்றும்,

யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ

மாகியாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர் -

என்றும் எல்லாச் சமயங்களையும்-உலக சமயங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிய பெருங் சமயமாக அன்றோ இது உள்ளது. பெரியபுராணச் சா க் கி ய நாயனார் வரலாறு இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். ஒர் உலகம் என்றும் ஒரே உலகச் சமுதாயம் என்றும் கூறிக் கெண்டு அதேவேளையில் தன் சமயம் என்சமயம் என்று எல்லைக்கோடு இட்டு மாறுபட்டுப் போர் விளைக்கும் சமய நெறிகளுக்கு இந்த உண்மை ஒரு வேளை மாறுபட்டதாகத்

த ரி யா லாம். ஆனால் எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கே என்றருள் செய்யும் எம்பெருமான்,’ என்ற உலக ஒருமைக்கு வழிகாட்டும் நம் சமயத்தின் தொன்மையும் சிறப்பும் இதனால் விளங்கும், அதனாலே இச் சமயத்தில் தோன்றிய தாயுமான அடிகள். அங்கிங் கெனாதபடி எனத் தொடங்கும் தம் பாட்டில் தாம் வழிபடும் தெய்வத்தைப் பலவகையில் சுட்டி அது என் உளத்துக்கு இசைந்தது எனக் கூறிச் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/77&oldid=684878" இலிருந்து மீள்விக்கப்பட்டது