உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தாய்மை பாம்பு ஓடியது. ஓடுகிற பாம்பை வாளால் வீசிக் கொன்றுவிட்டு அங்கு ஓடிவந்து விழுந்தான் மன்னவன்.. "பிரபு! பிரபு!" கோப்பெருந்தேவி அழுதாள். செல்வத்தை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள் ளுங்கள்!" என்று இன்பசாகரனை இழுத்து அரசனின் கையிலே ஒப்புவித்தாள். று "அம்மா!" என ஓலமிட்டான் இளவரசன். தாய்மை தன் கடமையைச்செய்து விட்டு, கடை யை மூடிக்கொண்டது. அரசன் இளையராணியையும் தீட்சண்யனையும் வெறித்துப் பார்த்தான். அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துக் கொண்டிருந்தனர். "விடாதீர்கள், அவர்களை!" என்று கத்தினான். "அய்யோ! ஒரு விநாடி தவறி விட்டது-இல்லை யேல் நாகத்தை வாளால் நறுக்கி விட்டு, மனைவி மகன் இருவரையுமே காப்பாற்றி யிருப்பேன்! என அங் கலாய்த்துக் கொண்டான் அரசன். وو என் செய்வது? தாய்மையின் மதிப்பு தரணிக்குத் தெரிய வேண்டுமே- அதனால்தான் போலும் அவன் சிறிது தாமதமாக அங்கு வர நேர்ந்தது!