உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தாய்மை '"அட பித்து ! 'வைப்பு' என்றால் ஏன் கோபப்பட ணும் ! 'ஒய்ப்' என்ற இங்கிலீஷ் வார்த்தையை சொல் லத் தெரியாமல், அவா 'வைப்' என்று சொல்ரா ! அவ் வளவுதான்!” என்று ஒருபோடு போட்டார் கிருஷ் ணய்யர். கணவனே தெய்வம் என்று கருதிக் கிடக்கும் நாரா யணியும் அந்தப் பேச்சையெல்லாம் அதிகமாக வளர்த் தாமல் அவரோடு சுமூகமாகவே பழகி வந்தாள். திடீரென்று ஒரு நாள், வீட்டுக்கு வந்த அய்யரின் முகத்திலே சோகம் படர்ந்திருப்பதை நாராயணி கண் டாள். காரணம் கேட்டாள், கோயில் வேலையிலிருந்து தர்மகர்த்தா நரசிம்ம நாயுடு தன்னை விலக்கி விட்டார். என்று கூறினார் அய்யர். “ஏன்?”” என்று துடித்தாள் நாராயணி. "ஊரிலேயுள்ள பிராமணர்கள் எல்லாம் மாநாடு கூடினார்களாம். அதிலே நான் கலப்புத் திருமணம் செய்துகொண்டு உன்னோடு வாழ்வதைக் கண்டித்தார் சூத்திரச்சியோடு வாழுகிறவன், கோயிலிலே என்று - களாம். வாழுகிறவன்,கோயிலிலே சாமியைத் தொட்டுப் பூஜை செய்யக் கூடாது தர்மகர்த்தாவிடம் வலியுறுத்தினார்களாம். அதனால் தர்ம கர்த்தா என்னை விலக்கி விட்டார்" என்றார் அய்யர். G இப்படி ஒரு புரட்சிகரமான செய்தியைக் கேள்விப் பட்ட நாராயணி, கிருஷ்ணய்யரைக் கட்டிப் பிடித்தபடி, "பிராமணோத்தமரே! இந்த அனாதைக்காக - உங்கள் ஆச்சார அனுஷ்டானங்களை யெல்லாம், எதிர்த்து நின்ற தோடு இல்லாமல், சமூகத்தையும் துச்சமாக மதித்து, -