உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுத்தெரு நாராயணி "ஆமாம்; அதற்கென்ன இப்போது?" 47 "ஞாபகமிருக்கா ? நேக்காக நீ உடல் - பொருள் - ஆவி மூன்றையும் தியாகம் செய்வேன்னு சொன்னியே!” 66 - "ஆமாம் சொன்னேன் இப்போதும் சொல் கிறேன் !” "நாராயணி ஆபத்து வந்து விட்டதடி! நீ, ஆவியை யும் பொருளையும் தியாகம் செய்யத் தேவையில்லை. உடலை மட்டும் தியாகம் செய் போதும்!” “என்ன சொல்கிறீர்கள் சுவாமி?" "ஆமாண்டி கண்ணே! என் உயிரைக் காப்பாற்ற வேணும்னா, நீ உன் உடலைத் தியாகம் செய்யத்தான் வேணும்!” "புரியவில்லையே!... وو "தர்மகர்த்தா நரசிம்ம நாயுடு இருக்காரே; அவ ருக்கு உன் உடலை 99 அய்யர் வாய்மூடவில்லை. அதற்குள் நாராயணி மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தாள். நாராயணிக்குப் பிரக்ஞை வந்தபோதுதான் கட்டி லிலே படுக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தாள். தன்னுடைய நெற்றியை மெதுவாகத் தடவிக் கொடுத் துக் கொண்டிருந்த கைகளைத் தனது கைகளால் வெறுப்- போடு நகர்த்தினாள். அப்படி அவள் நகர்த்தும்போது, கண்களை அகல விரித்துப் பார்த்தாள். அவளருகே சாய்ந்தபடி அமர்ந்திருந்தது கிருஷ்ணய்யர் அல்ல.