உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 وو தாய்மை காலையிலேதான் ஆயிரக்கால் மண்டபத்திலே அதி விமரி சையாக நடைபெற்றது.' எனக் கூறியபடி அவள் முகத் தோடு தன் முகத்தைப் பொருத்த முனைந்தார். அவரிட மிருந்து எப்படியும் விடுபடவேண்டும் என்ற ஆவேச உணர்ச்சியோடு அவரை ஒரே தள்ளாகக் கீழே தள்ளி விட்டு சுவரின் பக்கம் போய் ஒதுங்கி நின்று விம்மியழத் தொடங்கினாள் அவள். நாயுடுவுக்குக் கோபம் பிறந்தது. "நாராயணீ! இதனால் எனக்கொன்றும் நஷ்டமில்லை. நாளைக்கு உன் புருஷன் கையிலே காப்புப் போட்டுக்கொண்டு வீதியிலே போவான். அதைப் பார்த்கவேண்டுமென்ற ஆசையிருந் தால் உன் இஷ்டப்படியே நட!" என்று கூறிவிட்டு நாயுடு அறையைவிட்டு வெளியேறினார். 66 நாராயணி சிலைபோல் நின்று கொண்டிருந்தாள். கிருஷ்ணய்யர் அவளை நோக்கி வேகமாக ஓடிவந்தார்— அடிபாவி! என்னை மோசம் செய்துவிட்டாயே! என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு அலறினார். நாராயணிக்கு அவரோடு பேசமனமில்லை. பேசாமல் கட்டிலே உட்கார்ந்துகொண்டு கிருஷ்ணய்யரை எரித்து விடுவதுபோல் பார்த்தாள். . "ஏண்டி, இப்படி என்னைப் பார்க்கிறே ? என்னை ஜெயிலில் போடறதுக்கு நீயும் தீர்மானிச்சுட்டியா?" கிருஷ்ணய்யர் பரிதாபமாகக் கேட்டார். நாராயண பேசாமலிருக்கவே, மீண்டும் அவரே பேச்சைத் தொடர்ந் தார். "அடி என் கண்ணு! என் நிலைமை நோக்குத் தெரி யாதுடி! கைக்கு விலங்கு காத்துண்டு இருக்கடி !..... DO ..