உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பு 61 எத்தனை நாளைக்கு இப்படியே இருந்துவிட எண்ணுகிறாய் சென்றதை மறந்துவிட்டு, இன்னொரு திருமணத்தை ஏற்பாடு செய் ! நீ என்ன இப்போது கிழவனாகவா ஆகிவிட்டாய்!" என்று உபதேசம் செய்ய ஆரம்பித் தான் ! "கிழவனாகவும் ஆகிவிடவில்லை. கல்யாணமே இனி வேண்டாமெனும் ஞானியாகவும் மாறிவிடவில்லை. ஆனால்... குழந்தை குமார் இருக்கிறான்...வரப்போகும் புதிய தாயார் அவனுக்கு ஒரு கிரகண' மாகிவிட்டால் என்னப்பா செய்வது ?" என்றபடி கண்ணீர் வடித் தான் கோகுல். நீண்டநேரம் உரையாடலுக்குப் பிறகு எந்த முடிவுமில்லாமலே இருவரும் பிரிந்தனர். திருக்குவளைக்கு அருகே ஆறு மைலுக்கு அப்பால் அம்மனூர் சென்றால் புகைவண்டியில் செல்ல வசதியா யிருக்கும் என்று கூறி, கோகுலை ஒரு இரட்டைமாட்டு வண்டியிலேற்றி விட்டிருந்தான் ரத்தினம். ரயில் வரு வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே ரயில் நிலை யத்திற்கு வந்து சேர்ந்தான் கோகுல். வந்த வண்டிக்கா ரனும் திரும்பிப்போய் விட்டான். அந்தச் சிறிய ரயிலடியில் பேச்சுத் துணைக்குக்கூட அவனுக்கு ஆள் கிடைக்க வில்லை. அங்குமிங்கும் உலாவிக்கொண்டேயிருந்தான். தனிமையின் தோழனாக சிகரெட்டையாவது தேடுவோ மென்று பக்கத்திலே விசாரித்தான். அதோ என்று கை காட்டிவிட்டுப் போனார்கள் ஊர்க்காரர்கள். இருட்டிலே மினுக் மினுக்கென்று வெளிச்சம் காட்டிக்கொண்டிருக்கும் அந்தச் சிறிய கடையை நோக்கி அவன் போனான். கடையிருந்தது ஆனால் வியாபாரம் .