உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தாய்மை அவளைப் பார்த்து, பயப்படாதே யம்மா! உன் அப்பா சாகவில்லை மயக்கம்தான்!" என்று ஆறுதல் கூறினான். அவளுக்குச் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. தந்தையைத் தொட்டுப்பார்த்தாள். அவன் கூறியது உண்மைதான். அய்யா! கொஞ்சநேரம் அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் ஒரே ஓட்டமாக ஓடி, வைத்தி யரை அழைத்து வந்து விடுகிறேன்." என்று கெஞ்சி னாள் அவள். கோகுல் முடியாது என்று சொல்ல முடியுமா? மிக மிக நெருக்கடியான சூழ்நிலை!... ரயில் நிலையத்திலே ரயில் வரப்போகிறது என அறிவிக்கும் மணி ஒலிப்பது அவன் காதிலே விழுந்தது. இருந்தாலும் அவளுடைய வேண்டுகோளை அவனால் மறுக்க முடிய வில்லை. சரியென்று தலை யசைத்தான். அவள் ஓடி னாள் சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் வைத்தியருடன் ஓடிவந்தாள். வைத்தியர் கிழவருக்கு ஏதேதோ சிகிச்சை கள் செய்து, மயக்கத்தைத் தெளிவித்தார். கிழவரும் மெதுவாகக் கண் விழித்து, கோமதி!" என அழைத்தார். அவளும் 'அப்பா' எனத் தாவினாள் கிழவரின் படுக்கை யிடம். "கோமதி! கோகுலின் உதடுகள் அந்தப் பெயரை உச்சரித்துப் பார்த்துக் கொண்டன. வைத்தி யர் போய்விட்டார். கோமதி நன்றி யொழுகும் கண் களால் கோகுலைப் பார்த்தாள். கோகுல் அந்த ஏழைக் குடும்பத்தின் இளஞ்சிட்டை இருதய பூர்வமாக வாழ்த்தி விட்டு "நான் வருகிறேனம்மா!" என்றான். படுக்கையி லிருந்த தந்தை, "யார் கோமதி அது?" என்று ஈனசரத் தில் கேட்டார். "யாரோ வழிப்போக்கு அப்பா! ரொம்ப நல்லவர்! நான் வைத்தியரை அழைத்து வரும்வரையில் அவர்தான் உங்களுக்குக் காவல் இருந்தார்!" என்று