உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தாய்மை புரியவில்லை. " அம்மா ஏன் இப்படிக் கத்துகிறது?” அப்பாவைக் கேட்டான். வேலைக்காரர்களைக் கேட்டான். பெரிய சாக்ரடீசாக இருந்தால் தானென்ன; குழந்தை யின் தர்க்கவாதக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட முடியுமா என்ன? குமாருக்கு செயல் மூலம் பதில் சொல்லி, கோமதி ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகி விட்டாள். குமார் எதிர்பார்த்த பாப்பா வந்துவிட்டது. "அம்மா, அம்மா! பாப்பாவை என்னோட பள் ளிக்கூடம் அழைச்சுகிட்டு போகலாமா?" போது குமாரை முத்தமிட்டுக்கொண்டே கோமதி, "இப் வேண்டாண்டா ராஜா!" என்று தழுவிக் கொண்டாள். அந்த அன்பு ஸ்பரிசத்திலே அந்த அரும்பு மெய்மறந்து போயிற்று. . ஒருவருக்கொருவர் சமமாக பலமும், வளமும் இருக் கும்போதே பொறாமை உணர்ச்சி தலை காட்டுகிற இந்த உலகில். குமாரைவிடத் தன் குழந்தை பலஹீனமாக வும், வளமற்றும் இருப்பதைக் காணும் கோமதிக்கு அது போன்ற பொறாமைக் கனல் அவளையுமறியாமல் மூண்ட தில் ஆச்சரியமில்லைதான்.

பாப்பா பிறந்தது முதல் அதற்கு நீங்காத நோய் தான்! அதைக் கவனிப்பதிலேயே அவளுக்கு நேரம் முழுவதும் செலவாயிற்று! தன் குழந்தையின் நோய் நீங்க கோகுல் நல்ல டாக்டரிடம் காட்டவில்லை என்ற வருத்தம் வேறு அவளுக்கு! "என் குழந்தைன்னா உங் களுக்குத் தள்ளுபடி !” என்று ஒரு நாள் அவள் கோப