உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தாய்மை புதைத்ததற்கு அவனல்லவா காரணமாம்! அய்யோ, அப்பா பாப்பாவை நினைத்து அழுதுகொண்டே யிருக் கிறாளே; அதற்கும் அவன்தானே காரணம்! கோகுல் எவ்வளவோ முயன்றும் அவனை சமாதானப்படுத்த. முடியவில்லை. "குழந்தை போய்விட்டது - அழுதால் வரப்போ கிறதா கோமதி? குமாரை சமாதானப்படுத்து! அவன் அப்படியே ஏங்கிவிட்டான்!" என்று தழுதழுத்த குர லிலே கோகுல், அவளிடம் வேண்டிக்கொண்டான். பய னில்லை. கோகுல் மனப்புயலைத் தணிக்கும் மார்க்கம் தெரியாமல் தத்தளித்தான். குமாரைக் கூப்பிட்டு சாப்பிட வற்புறுத்தினான். அவன் மறுத்தான். மனைவி யின் மீதுள்ள ஆத்திரத்தை குழந்தை மீது காட்ட வேண்டுமென்ற முறைப்படி, குமாரின் கன்னத்திலே கோகுல் ஓங்கி ஒரு அறை கொடுத்துவிட்டு விர்ரெனம் பறந்துவிட்டான், அலுவலகத்திற்கு. . "அப்பா ஏன் என்னை அடிக்கவேண்டும்?" விடை காண முடியவில்லை அந்தப் பச்சை பாலகனால்! பேசா மல் எழுந்து பள்ளிக்கூடம் போய்விட்டான். பத்திரிகை ஆபீஸில் கோகுலுக்கு வேலை ஓடவில்லை. மாலை ஆறு மணி ஆகியும் நினைத்த கட்டுரையை எழுதி முடிக்க இயலவில்லை. மன நிம்மதியல்லவா எழுத்தாள னுக்கு முக்கிய மூலதனம்; தொட்டுத் தொட்டு வளர்த்த. தன் அருமைச் செல்வத்தை அறைந்து விட்டதை நினைத்து நினைத்து வெதும்பினான். அவன் முதல் மனைவி, அவனெதிரே வந்து காலைப் பிடித்துக்கொண்டு