பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

ix



திலும் இன்று வென்றுகொண்டிருக்கின்றனர். எந்த நிலையிலும் அவர்கள் பிறமொழிக்குப் பல்லக்குத் தூக்குவதில்லை. அவர்களை யெல்லாம் 'மொழி வெறியர்' என்றோ, 'குறுகிய மனத்தினர்' என்றோ யாரும் கூறுவதில்லை. இங்கோ தமிழர்களைத் “தமிழில் பேசுக, எழுதுக, கற்க" என்றால் அதனைக் கேலி செய்கின்றனர். என்னே கொடுமை? எங்ஙனம் தமிழன் உருப்படுவான்?

"என்று தணியும் இந்தப் பிறமொழி மோகம்?" என்று கதறிப் பாட இன்று பாரதியார் இல்லை, ஆனால்.... இதோ முடியரசனார் கவிதை இருக்கிறது. கதறி அழ அல்ல; குமுறி எழ; சிங்கமெனச் சீறி எழ.

கவிச்சிங்கம் முடியரசனார் அவர்கள் தமிழ்மேல் தீராத்தாகம் கொண்டவர். இத்தொகுப்பில் உள்ள கவிதை ஒவ்வொன்றும் அவரின் தாய்மொழிப் பற்றினைப் பறைசாற்றும். தாய்மொழி காப்பதில் கவிஞரின் புரட்சி உணர்வை, எழுச்சியை இக் கவிதைகளைப் படிப்போர் அறிவது மட்டுமல்லாது, அவர்தம் உள்ளமும் பாயும்; சிங்கமெனச் சீறி எழும்; எழுக, வெல்க!

தாய்மொழி காப்போம்! முத்தமிழுக்கு முடிசூட்டுவோம்!


19, 3ஆம் வீதி, காந்திபுரம்,
அன்பன், காரைக்குடி - 630 001

அன்பன்,
மு.பாரிமுடியரசன்


முடியரசன் குடில்
569, பூங்கொடிவீதி,
சூடாமணி நகர்,
காரைக்குடி- 630003