பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மனைவி நான் என்று என்னுள் ஒரேமுறை கூறிக்கொண் டாலும் போதும் என்ற துடிப்பு வெறியில் உழன்ற நான் வெற்றிபெற்றேன். சாந்தினி எழுதியதுபோல நான் அன்று உங்கட்குக் கடிதம் எழுதிவைத்தேன். குற்றம்தான்! அதை என் ஆயுட்காலம் முழுவதும் மறைத்து வைத்திருக்கலாம். என் மனச்சாட்சி என்னே வதைத்தது. ரகசியத்தை உங்க ளிடம் கூறினுல், நீங்கள் எரிமலையாக வெடிப்பீர்கள் என் பதையும் அறிந்தேதான் இதோ, இந்தப் பாலை அருந்தி உங்களிடம் விடை பெறுகிறேன், உங்கள் மனைவியாக நின்று: என் பாக்கியம் அவ்வளவுதான்! என்னை மன்னியுங்கள். உங்கள் பாதங்களுக்கு என் கடைசி வணக்கங்கள். என்றும் தங்கள் அடியாளாகக் கனவு கண்ட அபலை மாவினி' ※ 米 ※ அந்நாள் இலக்கியச் சந்தையில் புதிதாகப் பூத்த ஒரு கதைமலர் வாசகர்களது கவனத்தைக் கவர்ந்தது. மூன்று துருவங்கள்” என்ற ஆசிரியர் சுதர்சனின் நூல் அது! அதன் முதல் ஏட்டில் காணிக்கை என்ற தலைப்பில் கீழ்க்கண்ட சில வரிகள் அச்சாகியிருந்தன: "தழுவாத மூன்று துருவங்கள் என்வரை-எங்கள் மூவர் வரை-தழுவும் துருவங்களாக வாய்ப்பு அண்டியும், அவை பிரிந்துவிட்டன. பித்தகிை ஏங்கித்தவித்து நிற்கும் நான், என் மனைவியாக அங்கம் வகித்து உயிர் நீத்த என் முதல்மனைவி சாந்தினி, பின் என் இரண்டாம் மனைவியாக ஒரு கணம் நின்று நிறைவுற்றுப் பிறகு விடுதலைபெற்ற என் உயிர்த்துணை மாலினி ஆகிய என் இரு துணைவிகளின் இன்ப நினைவாக என்னுடைய இந்த மூன்று துருவங்கள்' எனும் தொகுதியை அவர்கட்குக்காணிக்கை செலுத்துகிறேன், ஃ

**

சுதர்சன்