பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய் வீட்டுச் இர் தெரு வாசலில் போடப்பட்டிருந்த காவணத்தை மிதித்ததும், கைப்பிடியில் இருந்த குடையைச் சுருக்கிக் கட்கத்தில் வைத்துக் கொண்டு நிலைப்படியைத் தாண்டினர் மாசிமலை அம்பலம். கழுத்தில் உருமாலே சுற்றிப் போட்டி ருந்த துண்டை எடுத்துமுகத்தைத் துடைத்துக்கொண்டார். மண்டை வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது; அவருடைய மனத்தை அழுத்திக் கொண்டிருந்த சுமை தலைக்கு மாறியது போலும் ஒரு கணம், ஐயனர் சிலையென மலைத்து வீற்றிருந் தார். மறு விடிையில் அவரது விழி வளையங்களில் நீர்த்துளி கள் ஊஞ்சலாடத் தொடங்கின. பெருமூச்சும் புறப்படத் தப்பவில்லை!. 'ஆயி!...” பாசத்தின் அழைப்பு சமையற் கூடத்துக்கு ஓடிற்று. அவரது கண்கள் பின்புறம் திரும்பின. வேட்டித் தலைப்பை எடுத்துக் கண்களை ஒற்றி யெடுத்தார்; முகத்தையும் துடைத் துக்கொண்டார்; வலிய வரவழைக்கப்பட்ட சிரிப்பு இதழ்க் கரையில் ஒதுங்கியிருந்தது. - "அப்பாவா?...வந்திட்டீங்களா? சத்தம் காட்டாமக் குந்திக்கிட்டிருக்கீங்களே?...” 'இப்பத்தான் ரவை பொழுதுக்கு முந்தித்தான் வந் தேன். வயசு காலம் பாரு, ஒண்ணும் முடியலே. களைப்பாறி னேன்; அவ்வளவுதான்!” 'குந்துங்க அப்பா; நீராகாரத் தண்ணி கலக்கிக்கிட்டு ஒடியாரேன். நீங்க ஊரணிக்குப் போய்த் திரும்புறதுக் குள்ளே, நான் சோருக்கிப்பிடுவேன்.”