பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

மக்சீம் கார்க்கி


விட்டுக்கொண்டான். ஆனால் அவன் எதைச் சொன்னாலும் சகல மக்களையும் பொதுப்படையான முறையில் குறை கூறுவதுபோலத்தான் இருந்தது. அது நிகலாய்க்குத் திருப்தியளிக்கவில்லை. அவன் தனது தடித்த உதடுகளைக் கப்பென்று மூடியவாறே தலையை அசைப்பான். ‘அது அப்படியல்ல’ என்று ஏதாவது முணுமுணுப்பான். கடைசியாக அவன் திருப்தியடையாத கலங்கிய மனத்தோடு விடைபெற்றுக்கொண்டு செல்வான். 0

ஒருநாள் அவன் சொன்னான்;

“இல்லை. குற்றம் சாட்டப்படவேண்டிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இங்கேயே இருக்கிறார்கள். நான் சொல்லுகிறேன். கேள், நாமோ வாழ்நாள் முழுவதும் தழை படர்ந்த வயல் வெளியை கருணையின்றி உழுது தன்ளுவது மாதிரி உழைத்து உழைத்துச் சாக வேண்டியிருக்கிறது!”

‘உன்னைப்பற்றி இஸாயும் இதைத்தான் ஒருநாள் சொன்னான்’ என்று சொன்னாள் தாய்.

“யார், இஸாயா?” என்று ஒரு கணம் கழித்துக் கேட்டான நிகலாய்.

“ஆமாம். அவன் ஒரு மோசமான பயல், அவன் எல்லோர் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறான். எல்லோரைப் பற்றியும் அநாசவசியமான கேள்விகளையெல்லாம் கேட்கிறான். அவன் நமது தெருவுக்குள்ளும் வந்து, ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறான்.”

“என்னது? ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறானா?” என்று திருப்பிக் கேட்டான் நிகலாய்.

ஆனால் அதற்குள் தாய் படுக்கச் சென்றுவிட்டாள், எனவே அவனது முகத்தை அவள் பார்க்கவில்லை. இருந்தாலும் ஹஹோல் பேசியதைப் பார்த்தால், தான் அந்த விஷயத்தை நிகலாயிடம் சொல்லியிருக்கக்கூடாது என்றுதான் அவளுக்குப்பட்டது.

ஹஹோல் அவசர அவசரமாகக் குறுக்கிட்டுச் சொன்னாள்: “அவனுக்குப் பொழுது போகாவிட்டால் இப்படி எட்டிப் பார்த்துவிட்டுத்தான் போகட்டுமே...”

“நிறுத்து” என்றான் நிகலாய்; “குற்றம் சாட்டப்பட வேண்டியவர்களில் அவனும் ஒருவன்!”

“அவனை எதற்காக குற்றம் கூறவேண்டும்? முட்டாளாக இருப்பதற்காகவா?’ என்று அவசரமாக் கேட்டான் அந்திரேய்.

நிகலாய் பதிலே பேசாமல் எழுந்து சென்றுவிட்டான். ஹஹோல் அறைக்குள்ளே மெதுவாகவும் சோர்வோடும் மேலும் கீழும் நடந்தான்.