இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாகரிகப் பேச்சு
3
தற்கான நிலைமைகள் தோன்றுகின்றன. இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள எத்தனையோ தந்திரமான விளம்பரங்களை நாம் நாள்தோறும் பார்க்கிறோம். போட்டியை அடிப்படையாகக் கொண்ட இன்றைய சமூகத்திலே தாழ்வுணர்ச்சிக்கு ஆதிக்கம் செலுத்த நல்ல வாய்ப்பும் கிடைக்கிறது.
ஆதலால் தாழ்வுணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை என்றெல்லாம் சொல்லுவதின் பொருளென்ன, அது எப்படிbஉண்டாகிறது, அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன என்பனவற்றை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது.