பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டு - 89 படம் 41. கொலிஷியா இலைத் தொழில் தண்டு வலிய முள்ளாக மாறியமைகிறது. இம் முட்கள் கணுக்குருத்தே யாதலாலும், இவை கிளேகளாகப் பெறும் அமைப்பைப் பெற்றுள்ள படி.ாலும், முட்களின் மேல் சிறுசிறு கணுக்கள் தோன்றிக் கிளேக்கும். இம் முட்களுக்கும், கருவேலன், இலந்தை (Zizyphus jujuta) இவற்றில் உள்ள கூர்முட்களுக்கும் (spines) வேறுபாடு உண்டு. இம் மரங்களில் இலேயடிச்செதில் கூர்முள்ளாக மாறி யுள்ளது என்று முன்னர் அறிந்தோம். துாதுவளே, கலியான முருங்கை (erythrina indica) முதலியவற்றின் தண்டு முழுவதிலும் உள்ள (வளே முள்) சிறு முட்களும் (emergences) இவற்றிலிருந்து வேறுபட்டவை. தண்டின் தொழில்கள் 1. வேர்களால் உறிஞ்சப்படும் நீர், நீருடன் உப்புகள் இவற்றை இலேகளுக்கும், பசுமையான தண்டின் பகுதிக்கும் கடத்துதல்.