பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தாவரம்-வாழ்வும் வரலாறும் வானத்தில் சுற்றிவரும் கோள்களிலிருந்து நுண்ணிய உயி ரினங்கள் இவ்வுலகிற்கு வந்திருக்கக்கூடும் என்ற கொள்கை 19ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் நிலவி வந்தது. ஆனல், அதற்கு எதிர்ப்பும் இல்லாமலில்லே. எனினும், பிற்காலத்தில் உயிரில்லாத பொருள்களிடமிருந்து உயிர்கள் தோன்றி இருக்க வேண்டுமென்ற கருத்து வலுவடைந்தது. அண்டத்தில் நம் மண்ணுலகம் தோன்றி ஏறக்குறைய ת இ200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்பர். உலகில் உயிர்கள் தோன்றுவதற்கு வெகு காலமாயிற்று. அப்போதிருந்த சூழ்நிலையில் உலகம் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதை ஒருவாறு ஊகித்து அறியலாம். நட்சத்திர ஒளிக்கதிரையும், நிலத்தின் அமைப்பையும், வர்னத்திலிருந்து சிதறி விழுந்த விண்கற்களே யும் (meteorites) ஆராய்ந்து பார்த்தால் அந்நாளில் நிலத்தின் நடுவே, உலோகக் கலப்புள்ள கார்பைடுகளும், நைட்ரைடுகளும் (metallic carbides and nitrides) இருந்திருக்கலாம் என்பர். நிலத்தின் மேற்பரப்பாகிய ஒடு (Crest) பாறை உலகம் (Lithosphere) எனப்படும். இதில் இருந்த கனமான பொருள்கள் நிலத்திற்குள் அழுந்தின. இவ்வோட்டினிடமாக ஒன்றி இருக்கும் மற்ருெரு மேற்பரப்பிற்கு நீருலகம் (Hydrosphere) என்று பெயர். இப்போது நிலத்தைச் சுற்றியுள்ள நீர் அப்போது மிகவும் குறைந்திருந்தது. அந்த நீரில் வேதிப் பொருள்கள் மிகக் குறைவு. காலப் போக்கில் கரிமக் கலப்பற்ற வேதிப் பொருள்கள் (Inorganic compounds) நீரில் கரைந்து கரைந்து அதிகரித்தன. இந்த மாறுதல் உயிர்த் தோற் றத்திற்கு இன்றியமையாத முன்னேற்பாடாகும். இந்த நீருலகத் திற்குமேல் உள்ளது வளியுலகம் (Atmosphere). இவைகளின் வெப்ப நிலை சூரியனிலிருந்து பெறப்பட்டது. இந்த மூன்று படலங் களிலும் பல்வேறு வகையான மாறுதல்கள் ஏற்பட்டன. நில ஒட்டில் ஹீலியம் (helium), நீர் வளி (hydrogen) ஆகிய மூலகங் SGr5th (elements), ð (356ör (methane), FF (3.3565r (ethene), sø4fllq-6845r (acetylene) (p;568 u fifth offloo & goth (hydro-carbons) (3.5m 65rp லாயின. அவற்றுள் ஒரு பகுதி வளியுலகில் நிற்க, ஒரு பகுதி சில வேதிமாற்றங்களே அடைந்தது. இம் மாற்றங்களுக்கெல்லாம் சூரிய ஒளிக் கதிர்கள், எரிமலேகள், வளியுலகில் உண்டாகும் மின்சாரச் சிதறல் முதலியவை சக்தி கொடுத்தன. இந்த வேதி மாற்றம் உயிர்ப்பொருள்களுக்கு வேண்டிய மூலப் பொருள்களே உண்டாக்கிற்று. இந்நிலையில் உலகமும் நாளடைவில் நன்கு குளிர்ந்து வந்தது. நீர்வளி, வெடியுப்பு வளி (nitrogen), கரி (carbon), உயிர்வளி (oxygen) ஆகியவற்றை மூலமாகக் கொண்டு மிகச் சிக்கலான கலப்புப் பொருள்கள் தோன்றலாயின. இவை