பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தாவரம்-வாழ்வும் வரலாறும் நீரினுல் கனி பரவுதல் 6:56ör&sor (cocos nucifera), uur&rl'ı Lisif (entada gigas) இவற்றின் கனிகள் நீரில் மிதந்து நெடுந்தொலேவிற்குச் செல்லும். ஒரு தீவில் இருந்து மற்றத் தீவுகளுக்குத் தேங்காய் கடல் நீரில் மிதந்து செல்வது ஃபிஜி தீவுகளில் (Fiji islands) சாதாரணமாகக் காணப்படுகின்றது. யானேப்புளி மலேயா தீவுகளில் இவ்வாறே பரவியுள்ளன. இக் கனிகள் கடல் நீரினுல் பாதிக்கப்படாமல் பல நாட்கள் மிதக்கக்கூடும். அல்லிக்கொடியின் விதைகள் மிகச் சிறியவை. அவைகளில் இருக்கும் பத்திரி (aril) அவை நீரில் அமிழாவண்ணம் மிதந்து செல்லப் பயன்படுகிறது. படம் 65. கனிகள் பரவுதல் 1. வெம்பாடம், 2. டொடோனியா, 3. முடக்கற்ருன், 4. டெராக்சாகம் (பாரசூட் போலப் பரவும்) 5. ஹைரோகார்பஸ், 6. மாதவி,