பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தாவரம்-வாழ்வும் வரலாறும் படை ஒரு வளையமாகித் தோன்றும். இங்ங்னம் உண்டாகிய வளர் படை வளேயம் உட்புறத்தில் இரண்டாம் தாருவையும் (secondary xylem) வெளிப்புறத்தில் இரண்டாம் சல்லடைக் குழாய்த் தொகுதி யையும் (secondary phloem) மேலும் மேலும் படைத்துக்கொண்டு வரும். எனினும், ஆதித்தாரு (primary xylem) அப்படியே இருக்கும். உட்சோறு வர வர இரண்டாந்தாருவாகிவிடும். வெளிப்புறம் வளர்ந்து சேரும் இரண்டாம் சல்லடைக்குழாய் உயிரணுக்கள், ஆதிச் சல்லடைக் குழாய்த் தொகுதியை (primary phloem) வெளியில் தள்ளிக்கொண்டு மிகுத்து வளரும். இதில் மிக அகலமான, ஆனால், மெல்லிய சுவுருடைய தாருக் குழாய்களும் மிகப்பல மர உயிரணுக்களும் (wood parenchyma) காணப்படும். நார்கள் (fibres) தண்டுகளில் இருப்பதுபோல அவ்வளவு அதிகமாக இல்லை. வேர்கள் தண்டுகளேப்போல வெளியுலகச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதில்லே. இதல்ை ஆண்டு வளையங்கள் அதிகமாக உண்டாவதில்லே. இவற்றில் உண்டாகும் வெளிப் பட்டை மெல்லியதாக இருக்கும். புறணியிலுள்ள உயிரணுக்கள் மெல்லிய சுவருடையனவாதலின் வெளிப்பட்டை உண்டாகும் போது அது நசுங்கிப் போவதுமுண்டு (படம் 87, 88).