பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தாவரம்-வாழ்வும் வரலாறும் ஆணகம் : பத்துத் தாதிழைகள் பொதுவாக உண்டு. இவை ஒரே மாதிரியாக எல்லாப் பூவிலும் இருப்பதில்லை; செர்சிஸ் பூவிலும் மயிற்கொன்றைப் பூவிலும் தனித்து உள்ளன. அம்ஹெர் ஸ்டியாவில் ஒன்பது சிறு இழைகள் ஒன்ருகவும், மேற்புறத்தில் ஒன்று தனித்தும் நீண்டும் இருக்கும். புளியம்பூவின் மேற்புறத்தில் உள்ள நான்கு இழைகள் குறைந்து அருகியுள்ளன. அடிப் புறத்தில் உள்ள ஐந்து இதழ்கள் நன்கு வளர்ந்து செயற்படு கின்றன. த கரைப் பூவில் உன்ள பத்துத் தாதிழைகளில் (cassia occidentalis) அடியில் உள்ள மூன்று பெரியதாகவும், பக்கங்களில் உள்ள நான்கு சிறியதாகவும், மேற்புறத்து உள்ள மூன்று வளராமல் அருகியும் உள்ளன. கொன்றைப் பூவில் (cassia fistula) அடிப்புறத்து மூன்று மிகப் பெரியதாகவும், மேற்புறத்து மூன்று மிகச் சிறியதாகவும், இரு பக்கங்களிலுள்ள நான்கும் இடைப்பட்ட தாகவும் இருக்கும். பெண்ணகம் : ஒரறை உடைய ஒரிலேச் சூலகம்; பல சூல்கள் உள்ளன. கனி : இதில் வெடி கனியும் வெடியாக் கனியும் உண்டு. கொன்றையின் கனி மிக நீண்டு, சதைப்பற்று உடையதாக இருக்கும். விதைகள் முளே சூழ் தசையைப் பெற்றும் பெருமலும் இருக்கும். பயன் : இராவணன் சீதையை அசோக மரத்தடியில் சிறை வைத்தான் என்பர். அசோகு சங்கத் தமிழில் பிண்டி எனப்படும் (saraca indica) பிண்டி ஒண்டளிர் அழகாக இருக்கும். இதனே மகளிர் காதுகளிற் செருகிக்கொள்வர் எனக் காளிதாசனும் நக்கீரரும் கூறுவர். கொன்றை, சங்கத்தமிழில் பலவாறு பயிலப் படுகின்றது. கொன்றை மலரும் கார்காலத்திற்குள் கடிது வருவன் என்று கூறிப் பிரிந்த காதலன் காலம் பிழைத்தான். கொன்றை மலர்ந்தது. தலேமகள் அ ல ம ந் து கலங்குகின்ருள். அவளே ஆற்றுப்படுத்த எண்ணிய தோழி, கொன்றைமரம் வம்ப மாரியைக் காரென மதித்துக் காலம் அல்லாக் காலத்துப் பூத்ததாகக் கூறிய பாட்டு ஒன்று உண்டு. அன்றி, குறிஞ்சிப்பாட்டில், கொன்றையின் மஞ்சரியைத் துரங்கினர்க் கொன்றை ’ என்பர். இதன் பூந்துணர் கீழ் நோக்கியே வளரும் இயல்பினேப் புலவர்கள் நன்கு அறிந்து கூறுகின்றனர். * __

  • தமிழ்ப் பொழிலில் கொன்றையைப் பற்றிய எமது கட்டுரையில் காண்க.