பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 161


காட்டாமலேயே தன் வழியே சென்று கடலில் கலக்கிறது

அறிவின் கீழ் நோக்கிச் செல்லும் போக்கு யாவரையும் முழு ஒற்றுமையை நோக்கியே இட்டுச் செல்கிறது

ஆற்றின் போக்கை ஒட்டி அமைதியாகவே நீயும் செல்

குருதியின் ஆர்வமும் விரைவும் சேர வேண்டிய இலக்கு என்கிற குறிக்கோளை நோக்கியே செல்கின்றன

கீழ் நோக்கிச் செல்லுதல் என்கிற முறையை நினைவில் கொள் ஆற்றின் போக்கைப் பின் பற்று

198. தொடக்கத்தின் தொடக்கம்

தொடக்கம் என்று ஒன்று இருக்குமானால், அந்தத் தொடக்கத்திற்கும் ஒரு தொடக்கம் இருக்க வேணடும அதே போல் தொடக்கத்தின் தொடக்கத்திற்கும் ஒரு தொடக்கம் இருக்கவேண்டும இந் நிலையில் எந்தத் தொடக்கம்தான் தொடக்கமாயிருக்க முடியும்?

எந்தத் தொடக்கத்திற்கும் மூல காரணம் ஆர்வம் ஆர்வத்திலிருந்து உயிர்த்து எழுவதுதான் ஒவ்வொரு தொடக்கமும் ஓடிக்கொண்டேயிருக்கும நீர்தான் ஆறு