பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



52 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


களும் மற்ற உடல் மூலம் ஓர் உடலின் புலன்கள் ஈர்க்கப் படுகின்றன புதிது ஆனால் பழக்கப்பட்டது, தனியானது ஆனால் உரிமையானது ஒவ்வொருவரின் உடலும் வேறுபட்டும் ஒரே வேறுபடாமையுந்தான்

ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மற்றவர் உடல் மூலம தன் உடலைக் காணும் போது இயற்கைநெறி உள்ளது

65. இயற்கை ஒன்றும் இல்லாதது

சொற்களின் வெளிப்புற அமைப்பு மூலம் சொற்களை அறிந்து கொள்வது போலவே, வெளிப் படையான எண்ணங்கள் வழியேதான் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ள வேறொன்று தேவைப்படுகிறது இவ் வகையான எண்ணம் எங்கே இட்டுச் செல்லும்?

ஆண் பெண்ணின் மூலம் ஆணைப் புரிந்து கொள்கிறான் பெண்ணும் ஆண் மூலம் பெண்ணை அறிந்து கொள்கிறாள் ஆணையும் பெண்ணையும புரிந்து கொளள வேறு ஒன்று தேவைப்படுகிறது அந்த வேறு ஒன்று இன்னும் ஏதோ ஒன்று தேவைப்படுகிறது அந்த மிகுதியான ஒன்று எல்லாவற்றிலும தேவைப் படுகிறது எல்லாவற்றையும் புரிந்து கொள்ள எதையும் அறியாதே