பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 69



அறிகின்ற உள்புறமாகவும், உள்ளே உள்ளதைப் புரிந்து கொள்கின்ற வெளியே உள்ளதாக இருக்கிறது. இப்படித்தான் வெளியே உள்ளதைச் சந்திக்கின்ற உட்புறம். மற்றவரைக் காண்கின்றது. ஒவ்வொருவரும் இருவராகவும் ஆகின்ற பொருள்தான் அது

மூன்றாவது மனம் பிடிபடாதது, எதிர்த்து நிற்பது. புதையலை இழப்பதின் மூலம் அது தானே காலத்தில் வெளிப்படும்

86. விதையும் விளைநிலமும்

ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரிடமிருந்து வளர்கின்றனர். ஒவ்வொருவரும் மற்றவரின் மண்ணாகவும், விதையாகவும் உள்ளனர்

உந்துதலும், பலமும், மாற்றமும் உள்ளபோது, ஒருவருக்கொருவர் வித்திடுங்கள், திட்டமிட்ட தகப்பனாக இரு. பொறுமை, கவனிப்பு அமைதி உள்ள போது ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்க. வளர்க்கும் தாயாக இரு

விதை, மண் இவற்றிலிருந்து வாக்குறுதி உருவாகிறது.