பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51


அமிர்தபுரி ராஜ்யத்தின் மக்கள் அனைவரும் தம் குலதெய்வம் தேவி பராசக்தியை நெஞ்சுருகப் பிரார்த்தித்தார்கள்.

"தாயே! எங்கள் ராஜாவைப் போல இனி எங்களுக்கு வேறு ஒருவர் கிடைப்பதே அரிது. ஆகையால் அவர் புனர்வாழ்வு பெற, நீ அருள் செய். அவருடைய காணாமல்போன மகனை_எங்கள் யுவராஜாவை எப்படியும் நீதான் அவர் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்த வேண்டும்...தாயே, மகேஸ்வரி...!"

***

குணேந்திரபால மன்னரின் கண்களினின்றும் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. கைப்பிடியிலிருந்த அந்தப் படத்தினையே வைத்த கண் வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் அரசர். அது அவரது புதல்வனின் திருஉருவப்படம். பாலவயதில் எடுத்த புகைப் படத்தைக் கொண்டு, தன் மகனை இளவரசக் கோலத்தில் கைதேர்ந்த சைத்ரீகனைக் கொண்டு தீட்டச் செய்த உயிரோவியம் அது. ஓவியம் பூபாலனுக்கு தெம்பைத் தந்தது. ஆனாலும் அது அவரின் கண்ணீரை அதிகப்படுத்திவிட்டதே!

"மன்னர் மன்னா!”

அரசன் திரும்பினான்.