பக்கம்:திரட்டுப் பால்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - திரட்டுப்பால் அருணகிரியார் தம்முடைய பாட்டுக்கள் எழுதிய சுவடி யின் அடியேட்டில் அவன் பாதம் பட்டது என்கிருர், அந்த அடி ஏடு என்பது மன்த்தான். மயிலிலும் தேவர் தகல் யிலும் அவன் அடிகள் பட்டனவாம்.நம்முடையவிழிகளுக்குத் துணையாக இருப்பன அவன் திருமென் மலர்ப் பாதங்கள். நம்முடைய புத்தியைப் பிற பொருள்களில் செல்லாமல் வாங்கி அவன் பதாம்புயத்தில் புகட்டி அன்பால் முத்தியைப் பெறலாம், - முருகன் தன் அரையில் கிண்கிணி அணிந்திருக்கிருன். அதன் ஒசை பதிலுைலகமும் கேட்கின்றதாம். சிவப்பு ஆடையையும், கிண்கிணியையும், உடைமணியையும், உடைவாளேயும் புனைந்திருக்கிருன். அவன் தன் திருக்கரங்களால் சப்பாணி கொட்டுகிருன். அவற்றிலும் வெட்சி மாலையை அணிந்திருக்கிருன். சேவற் கொடியை ஏந்தியிருக்கிருன், எப்போதும் வேலேப் பிடித் திருக்கிருன். அதகுல்,"வேலே விளங்கு கையான்’ என்கிருர், அவன் வேலும் திருக்கரமும் உண்மையான துணையாக அன்பர்களுக்கு உள்ளன. அவன் கையிற் சிறு வாளும் சுட்டியும் கட்டாரியும் இருக்கின்றன. அவன் திருமார்பில் கடம்ப மலர்மாலே விளங்குகிறது, அது பொன் கட்டாற் செய்தது போலப் பொலிகின்றது; மணம் பரப்புகிறது. - . х அவனுடைய பன்னிரு தோள்களுடன் அவன் தித்தித் திருக்கும் அமுதாக இருக்கிறன். வள்ளியை அணைக்கின்ற தோள்கள் அவை. அவனுடைய திருமுகங்கள் வரிசையாக உள்ளன; ஆதலின் பத்தித் திருமுகம் என்கிருர். அவன் திருமுகம் ஆறும் கண்ட தபோதனர்க்கு யமபயம் இராது. அந்த முகங்கள் மணம் வீசுகின்றன. - . . . . அவன் கண்கள் தாமரை மலரைப் போல இலங்கு கின்றன. . . . . . . . ; : ...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/10&oldid=894368" இலிருந்து மீள்விக்கப்பட்டது