பக்கம்:திரட்டுப் பால்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - திரட்டுப்பால் பகிர்மின்கள் என்று உபதேசிக்கிறர். நாம் நொய்யாற் கஞ்சி செய்து உண்ணும் வறிய நிலையில் இருந்தாலும் அப்போதும் ஒரு பங்கு அறம் செய்ய வேண்டும் என்பது அவர் கருத்து. அப்படிச் செய்தால் அது நாம் இறுதியில் போகும் தொலேயா வழிக்குற்ற துணையாக வரும். நம் வறிய நிலையிலும் இலக்கறியாவது வெந்தது எதாவது ஏற்றவற்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும். அதுவே ஒரு வகைத் தவம். உள்ள போதே கொடாதவர் பிறகு இம்மையிலும் அம்மையிலும் துன்புறு வார்கள். இரு பங்கு பொருள் சேர்த்து அதில் ஒரு பங்கு பிறருக்குக் கொடுத்துப் பிறகு உண்டு இருக்க வேண்டு. மாம்; இதை, இருபிடி சோறு கொண்டிட்டுண்டிரும்’ என்று: குறிப்பாகச் சொல்கிரும். அப்படிப் பிறருக்குக் கொடுக்காமல் இருந்து விட்டால், அந்த உணவை உண்ட உடம்பு இறுதியில் ஒரு பிடி சாம்பலும் காணுத மாய உடம்பு என்கிருர், முருகனிடம் போலி அன்பு காட்டுகிறவர்கள், யாராவது வந்து இரந்தால் எங்கேயோ போகவேண்டுமென்று. அவசரமாக எழுந்து போய் விடுவார்களாம். அவர்கள் நிலையை, எங்கேனும் எழுந்திருப்பார்; வேற்குமாற். கன்பிலாதவர் ஞானம் மிகவும் நன்றே!’ என்று பரிகசிக் கிருர், இரப்பவர்களுக்கு இட்டது எங்காயினும் நமக்கு. வேறு வகையில் வந்து உதவும். பிறருக்கு இட்டு அதனல் வறுமை அடைந்தால் அது சிறந்ததாம்; இட்டு மிடிக்கின்றில நெஞ்சமே, தஞ்சமேது நமக்கினியே’’ என்று வேசாறு கிரு.ர். மகளிர் மயலில் ஈடுபட்ட்ாலும் வேலை மறவேன் என்கிருர் இறைவன் திருவடியே வீடு என்பதை, செக்கச் சிவந்த கழல்வீடு' என்று நினைப்பூட்டுகிருர், வீட்டிற். புகுவதற்கு எளிய வழி காட்டிற் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டுதல்; கருத்தைப் புகட்டுவது அரிதாயினும் .ே கிட்டிவிட்டால் பின்பு வீடு கிடைப்பது எளிதாகி, விடும். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/24&oldid=894382" இலிருந்து மீள்விக்கப்பட்டது