பக்கம்:திரட்டுப் பால்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. கந்தர் அலங்காரம் இறுகத் தழுவும் கடகா சலபன் னிருபுயனே. சாடும் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே ஒடும் கருத்தை இருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப் பாடும் கவுரி பவுரிகொண் டாடப் பசுபதிநின் ருடும் பொழுது பரமாய் இருக்கும், அதீதத்திலே. தந்தைக்கு முன்னம் தனிஞான வாள்.ஒன்று சாதித்தருள் கந்தச் சுவாமி எனத்தேற் றியபின்னர்க் காலன்வெம்பி வந்திப் பொழுதென்னே என்செய லாம்?சத்தி வாள்.ஒன்றில்ை சிந்தத் துணிப்பன் தணிப்பரும் கோயத்ரி சூலத்தையே. விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள்; மெய்ம்மைகுன்ரு மொழிக்குத் துணைமுரு காஎனும் நாமங்கள்; முன்புசெய்த பழிக்குத் துணைஅவன் பன்னிரு தோளும்; பயந்ததனி - வழிக்குத் துணைவடி வேலும்செங் கோடன் மயூரமுமே. (67% (68), (69), (70),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/60&oldid=894422" இலிருந்து மீள்விக்கப்பட்டது