பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். செல்லுதி = செல்லுவ + இ, இடைநிலைவக ரம் தகரமாய்த் திரிந்தது ; வெல்லுதி = வெல்லுவ + இ, வருதி = வருவ + இ. 'வருதி பெயாதி வருந்துதி துஞ்சாய் பொருதி புலம் புதி நீயும்' நன்-வி. • காணுதி = 'காண்பாய்' "காணுதி மெய்ம்மையென்று தம்பிக்குக் கழறிக்கண் ணன்” - கிட்கி. நவிறி = நவிலுதி “நகையுடை முகததாயாகிப் பின்னுரை நவிறி நா வால் - ஷ. அறிவாய் “பிறிது மன்னவன் பெருவலியாற்றலைப் பெரியோய் அறிதியென் னினுமுண்டுபாயம்”-ஷை. கண்டி = கண்ட + இ . டலரம் இறந்தகால இடை நிலை. காண்டி = காணுதி . டகரம் எதிர்கால இடைநிலை. "காவலுக்குரியதென்றாலன்ன துக்கருதிக்காண்டி”ஷை கொண்டி = கொண்ட + இ; டகரம் இறந்தகால இடைநிலை. கோடி = கொள்ளுதி ; டகரம் எதிர்கால இடை நிலை. "வனிதையை நாடிக் கோடி வானினு முயர்ந்ததோ ளாய்ஷ “ஒன்றுனக் குரைப்பதுண்டா லுறுதியஃ துணர்ந்து கோடி”-ஷை. 'சென்றி = சென்ற + இ ; றகரம் இறந்தகால இடை நிலை. சேறி = செல்லுதி; றகரம் எதிர்கால இடைநிலை. வென்றி = வென்ற +இ ; றகரம் இறந்தகால இடை நிலை. வேறி = வெல்லுதி. வேறு என்பதைப்பார். நின்றி = நின்ற + இ நிற்றி = நில்லுதி