பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்
12. ஆய்தம் மூன்று புள்ளி வடிவினதாய் வடமொழியி
லுள்ள ஹகாரத்தைப்போலுச்சரிக்கப்படும் எழுத்து.
ஆயுதம் - படை ; வரிவடிவில் படையைப் போலிருப்பத
னால் அதற்கு ஆயுதமென்று பெயர் வந்தது. ஆயுதம் ஆய்
தமென மருவியது.
13. மாத்திரை ஓரிமைப்பொழுதிலுச்சரிக்கப்படும் எழு
த்தின் அளவு.
14. குறில் ஒரு மாத்திரையுள்ள எழுத்து; அதற்குக்
குற்றெழுத்து எனவும் பெயர்.
15. நெடில் இரண்டு மாத்திரையுள்ள எழுத்து; அதற்
கு நெட்டெழுத்து எனவும் பெயர்.
16. அளபெடை மூன்றுமாத்திரையுள்ள எழுத்து.
17. பகுபதம் பலவுறுப்புக்களடங்கிய சொல்.
18. பகாப்பதம் ஒரேயுறுப்புள்ள சொல்.
19. பகுதி சொல்லின் முதனிலை.
20. வித்தி சொல்லின் ஈற்றுறுப்பு.
21. இடைநிலை வினைச்சொற்களில் பகுதிக்கும் விகுதிக்
கும் இடையில் காலங்காட்டிநிற்கும் உறுப்பு.
22. சாரியை* பகுட தவுறுப்புக்களுக்கிடையில் வரும்
எழுத்து அல்லது அசை.
23. அசைநிறைவிகுதி சொற்களுக்கு ஈற்றிலே பொரு
ளில்லாது வரும் எழுத்து அல்லது அசை.
(உ-ம்.) முன்னே - முன், ஏகாரம் பொருளில்லாது ஈற்றிலேவந்தது.
உள்ளே -உள், )
மேலே- மேல், ,
கீழே-கீழ், , )

  • " சாரியை என்றதன்பொருள் வேறாகிநின்ற இருமொழியும் தம்

மிற் சாாதற்பொருட்டு இயைந்துநின்றது என்றவாறு" என்று தச்சி
ஓர்க்கினியர் (தொல்- எழு சூக்-118.)