பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரபியல். 31. மூர்த்தநியம் அண்ணத்தின் மேற்புறத்தில் பிறக்கும் எழுத்து ; மூர்த்தர் - அண்ணத்தின் மேற்புறம். 32. தந்தியம் பற்களில் பிறக்கும் எழுத்து. 33. ஓட்டியம் இதழில் பிறக்கும் எழுத்து. கண்டிய முதலிய மேற்குறித்த பெயர்கள் வடமொழியிலிருந்து எடு த்து இங்காளப் பட்டன. அவற்றின் பிரயோஜகம் புணரியலில் நன் றாய்த் தெரியவரும். ஆயினும் அடியில்வரும் உதாரணங்களால் அந் தப் பிரயோஜந மித்தன்மைத்தெனச் சிறிது விளங்கும். 311) ரகரமொழிந்த மூர்த்தகியங்களோடு கூடிய தந்தியங்கள் மூர்த் ததியங்களாமென்று புணரியலில் ஒருவிதி எழுதப்பட்டிருக்கின்றது. மூர்த்த நியங்கள் ட, ண, ள, ழ, ற, ர. தந்தியங்கள் த, ந, ல, ன. கொள் + தல்= கொட்+ தல்=கொட்டல் = கோடல். மேறகண்ட உறுப்புச்சந்தியில் கொள் என்னும் பகுதி நிலையுறுப்பு. தல் என்பது வருமுறுப்பு. (2) வல்லினத்தின்பின் ல, ள, ன க்கள் வல்லினமாய்த் திரியுமென் னும் விதியால் தல் விகுதியின்பின் ளகரம் டகரமாய்த் திரிந்தது. திரி யவே கொட் + தல் எனநின்றது. கொட் என்னு முறுப்பின் ஈற்றிலி ருக்கும் மூர்த்தநியமாகிய டகாத்தோடு தல் என்னு முறுப்பின் முத லிலிருக்கும் தந்தியமாகிய தகரம்புணரத் தகரம் மூர்த்தநியமாய்த் திரிந்தது. தகரத்திற்கு இனமாகிய மூர்த் தமியம் டகரமா தலால் தகரம் டகரமாய்த் திரிந்தது, திரியவே கொட்+டல் என நின்றது. (3) சிலவிடங்களில் மூர்த்தநியத்தின் பின் மூர்த்தரியம் வந்தால் பின்னின்ற மூர்த் தமியங்கெட கெட்ட மூர்த்தமியத்தின் பின்னின்ற குறில் நீளும் ; பின்னின்றது நெடிலாயிருந்தால் நெடிலாகவே யிருக் கும் என்னும் விதியின்படி கொட்+டல் என்பது கொ+டல் என நின்று கோடல் என்று ஆகும். அப்படியே, வாழ் +நாள் என்னுஞ் சந்தியில் நிலையுறுப்பின் ஈற்று ழகரம் நகரத்தின்பின் மெல்லினமாய்த் திரிய வாண் +நாள் என நின்றது. மூர்த்தகியமாகிய ணகரத்தின் முன் தந்தியமாகிய நகரம் தனக்கினமாகிய ணகரமாய்த்திரிய , வாண் +ணாள் என நின்றது. மேற்கூறிய (3) விதியின்படி நிலையுறுப்பி னீற்று ணகரம் வருமுறுப் பினீற்று ணகரம் ஆகிய இரண்டில் பின்னின்ற ணகரம்கெட அதன் பின்னின்ற உயிர்க்கு நீட்டம் வரவேண்டும்; ஆயினும் இயற்கையில் நீண்ட உயிக்கு விதியினால் வரும் நீட்டம் அவசியமன்று.