பக்கம்:திரவிடத்தாய்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

என்றமையானும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகமென விசேடித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளை யொழித்து, வேங்கட மலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப" என்று தெய்வச்சிலையார் பிறனுடன்பட்டது தானுடன்படுதலாகக் கூறிய உரையே உண்மையானதாம்.

கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டையும்,


"தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா வதன்வடக்கு - நன்றாத சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்"


என்னும் வெண்பாவாற் குறித்து, "தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றமென்றும்; குடநாட்டார் தாயைத் தள்ளையென்றும், நாயை ஞெள்ளை என்றும்; குட்டநாட்டார் தந்தையை அச்சன் என்றும்; கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் என்றும்; சீத நாட்டார் ஏடா வென்பதனை எலுவன் என்றும், தோழியை இகுளை என்றும், தம்மாமி யென்பதனைத் தந்துவையென்றும்; பூழி நாட்டார் நாயை ஞமலியென்றும், சிறு குளத்தைப் பாழியென்றும், அருவா நாட்டார் செய்யைச் செறுவென்றும், சிறுகுளத்தைக் கேணியென்றும்; அருவா வட தலையார் குறுணியைக் குட்டையென்றும் வழங்குப"

என்று நச்சினார்க்கினியர் முதலியோர் காட்டுக் கூறியது கி.பி. 12ஆம் நூற்றாண்டிற் கேற்றதாதலின், கி.மு. 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்திற்கேற்காது.

"இனிச் சிங்களம் அந்தோ வென்பது; கருநடங்கரைச் சிக்க குளிர என்பன; வடுகு செப்பென்பது; துளு மாமரத்தைக் கொக்கென்பது; ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க" என்று நச்சினார்க்கினியரும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/21&oldid=1430601" இலிருந்து மீள்விக்கப்பட்டது