பக்கம்:திரவிடத்தாய்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

"தமிழ் இலக்கியம் தெலுங்கு கன்னட விலக்கியத்திற்கு முற்பட்டது; மலையாள விலக்கியத்திற்கு மிக முற்பட்டது."

(-. -. - ப. 126)

கால்டுவெல் கண்ட மொழிநூன் முடிபுகள்

"மொழிகள் மொழிக் குடும்பங்கள் ஆகியவற்றின் உறவைப் பதிற்பெயர்கள் (Pronouns) மிக விளக்குகின்றன. ஏனென்றால், பதிற்பெயர்கள், சிறப்பாகத் தன்மை முன்னிலை யொருமைப் பெயர்கள், பிற சொல்வகைகளைவிட மிகுதியாக நிலைப்புத் தன்மையைக் காட்டுகின்றன; பல்லூழிக் கடப்பிலும் மிகச் சிறிதே திரிவனவாகப் பொதுவாகக் காணப்படுகின்றன; எண்ணுப் பெயர்களினும், வேற்றுமையுருபுகளினும், வினை விகுதிகளினுங் கூட மிக நிலைத்தவையாயிருக்கின்றன; அவை பிறவற்றைப் போன்றே திரிவதற்கிடமிருப்பினும், அவற்றின் தொடர்புகளும் கிளைப்புகளும், காலத்தாலும் இடத்தாலும் எத்துணை அகன்று கிடப்பினும் ஏறத்தாழ மக்கள்மொழிகள் எல்லாவற்றிலும் கண்டு பிடிக்கப்படும். சிலவிடத்து, மூவிடப் பெயர்கள் மட்டுமே.

முதலாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தனவாயிருந்து பின்பு காலக் கடப்பினாலும் திரிபின் வளர்ச்சியினாலும் பொது முறையாக வேறுபட்டுள்ள மொழிகளின் தொடர்புக் குறிப்பாய் அல்லது உறவுச் சான்றாயுள்ளன. இக் குறிப்பு, சிறப்பாகச் சொல்வகைகள் யாவற்றிலும் மிக நிலைப்பாய்த் தோன்றுகின்ற தன்மைப் பெயர்களைத் தழுவும்."

(-. -. - ப. 254)

"பின்வரும் சொல்வரிசைகள் நாம் இலக்கண ஒப்பீட்டினால் கண்ட முடிபுக்கே தத்தம் அளவில் தனிப்பட்ட முறையில் சான்று பகர்கின்றன. அதாவது : திரவிட மொழிகள், இந்திய ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் முதுதாயாகக் கருதப்படுகின்ற - வடமொழிக்கு முற்பட்ட - ஆரிய மொழியொடு தமக்குள்ள தொன்மையான வேரூன்றிய தொடர்பைக் காட்டும்போதே, அவற்றுக்குச் சித்திய (Scythian) மொழிக் குடும்பத்துடன், சிறப்பாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/39&oldid=1430620" இலிருந்து மீள்விக்கப்பட்டது