பக்கம்:திரவிடத்தாய்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நரி நரெச்சாலும் கடிக்கும்.

நிலாவினெ நோக்கி நாயி குரக்கும்போலெ.

பலதுள்ளி பெரு வெள்ளம்.

மரத்தின்னு காயி கனமோ?

மருன்னும் விருன்னும் மூன்னு நாள்.

மலர்ன்னு கிடன்னு துப்பியால் மாறத்து விழும்.

மீங்கண்டம் வேண்டாத பூச்சயில்ல.

ரண்டு தோணியில் கால் வெச்சுது போலெ.

   தாழ = அடியில். ஏற = மிகுதியாக.ஒரு கதை

ஒரு அக்ரஹாரத்தில் ஒரு பிராமணன் பார்த்திருன்னு. அவன்னு மகன் ஒன்னே உண்டாயிருன்னு. ஒரு நாள் அவன் ஒரு வழிக்கு யாத்ர புறப்பெட்டு, மகனெயும் கூட்டிக்கொண்டு போயி, வழியில் வெச்சு ஆ செறுக்கன் அச்சனெ விளிச்சு, "அய்யோ! புலி வருன்னு" என்னு உறக்கே நிலவிளிச்சு. அச்சன் திரிஞ்ஞு நோக்கியபோள் புலியெ கண்டில்ல. அவர் பின்னேயும் குறய தூரம் போயபோள் வாஸ்தவத்தில் ஒரு புலி வன்னு செறுக்கனெ பிடிச்சு, ஆ செறுக்கன் வீண்டும் அச்சனெ விளிச்சு, தன்றெ மகன் மும்பேபோலே களிவாக்க பறயுன்னு என்னு விசாரிச்சு திரிஞ்ஞு நோக்கியில்ல. புலி செறுக்கனெ கொன்னு தின்னு.

இதன் சொன்மொழிபெயர்ப்பு

ஒரு பார்ப்பனச் சேரியில் ஒரு பார்ப்பான் வதிந்திருந்தான். அவனுக்கு மகன் ஒருவனே உண்டாயிருந்தான். ஒரு நாள் அவன் ஒரு வழிப்போக்குப் புறப்பட்டு மகனையுங் கூட்டிக்கொண்டு போனான். வழியில் வைத்து அச் சிறுக்கன் (சிறுவன்) அத்தனை (அப்பனை) விளித்து, "ஐயோ! புலி வருகிறது" என்று உரக்கக் கத்தினான். அத்தன் திரும்பி நோக்கிய போழ்து புலியைக் கண்டில்லை. அவர்கள் பின்னேயும் குறைந்த தொலைவு போய போழ்து உண்மையில் ஒரு புலி வந்து சிறுக்கனைப் பிடித்தது. அச் சிறுக்கன் மீண்டும் அத்தனை விளித்தான். தன்னுடைய மகன் முன்பேபோல விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று எண்ணித் திரும்பிப் பார்க்கவில்லை. புலி சிறுக்கனைக் கொன்று தின்றது.

குறிப்பு : சிறுக்கன் (ஆ. பா.) - சிறுக்கி (பெ. பா.). தமிழில் 'சிறுக்கன்' செய்யுள் வழக்கு; 'சிறுக்கி' உலக வழக்கு - களி (ம.) விளையாட்டு (த.).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/63&oldid=1430697" இலிருந்து மீள்விக்கப்பட்டது