பக்கம்:திரவிடத்தாய்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

என்றார் அகத்தியனார்" என்பது நன்னூல் மயிலைநாதர் உரை. (ப. 161). இவ் அகத்திய நூற்பாவிற் கூறப்படும் பெயர்கள் முதலாவது நாட்டைக் குறித்தவை யென்றும் பின்பு மொழி திரிந்தபின் மொழியைக் குறித்தனவென்றும் அறிதல் வேண்டும்.

சேரநாடு கடைக்கழகக் காலத்திலேயே குட (மேற்குத் தொடர்ச்சி) மலைக்கு மேற்பால் வேறும் கீழ்ப்பால் வேறுமாகப் பிரிந்து போயிற்று. கீழ்ப்பால் நாடு மீண்டும் தெற்கில் கொங்கு நாடும் வடக்கில் கங்கநாடும் இடையில் அதிகைநாடு துவரை நாடு முதலியனவுமாகப் பிரிந்துவிட்டது. அதிகைநாடு தகடூரை (இற்றைத் தர்மபுரியை)த் தலைநகராகக் கொண்டு அதிகமான் மரபினர் ஆண்டு வந்தது. கங்கநாடு, அதன் வடக்கில் கங்க மரபினர் குவளாலபுரத்தை (கோலார்)த் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தது. இது கங்கபாடி என்று கல்வெட்டுகளிற் கூறப்படும்.


"வெங்கை நாடுங் கங்க பாடியும்" (S.S.I.I. 94)


கங்க மரபினரான சிற்றரசர் கடைக்கழகக் காலத்திலே, மறத்திற் சிறந்து பெயர் பெற்றவராயிருந்தனர்.


"நன்ன னேற்றை றறும்பூ ணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி" (அகம். 44)



"பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்" (சிலப். 25 : 157)


எனப் பழைய நூல்கள் கூறுதல் காண்க.திரவிடத்தாய் இக் கங்க மரபைச் சேர்ந்தவனே, 12ஆம் நூற்றாண்டில் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தனும், 'அமராபரணன்' 'ஸ்ரீமத் குவளாலபுர பரமேசுவரன்', 'கங்ககுலோற்பவன்' என்று தன் மெய்க்கீர்த்திகளிற் பாராட்டப்பெறுபவனும், பவணந்தி முனிவரைக்கொண்டு நன்னூலை ஆக்குவித்தவனுமாகிய சீயகங்கன் என்பவன். இவன் ஒரு தமிழிலக்கணத்தை இயற்றுவித்ததினாலும், நன்னூற் சிறப்புப்பாயிரம்,


"குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/69&oldid=1430703" இலிருந்து மீள்விக்கப்பட்டது